Ganesh Chaturthi 2021: தும்பிக்கை முகத்தானை நம்பிக்கையுடன் வழிபடுவோம்

ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியன்று சிவ புத்திரன் விநாயகர் அவதரித்த நாள்

வினைகளை போக்குபவர் விநாயகர். எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும் அது எவ்வித தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் தொடங்குவது நமது வழக்கம். எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிக்கிறோம். கணபதியை வணங்கினால் காரியத்தடைகள் யாவும் நீங்கும். விக்ன விநாயகனை வணங்க வினை எதுவும் நெருங்காது.

Also Read | Ganesh Chaturthi 2021: முஸ்லீம் நாட்டில் விநாயகருக்கு கோவில் இருப்பது தெரியுமா?

1 /5

முழுமுதற் கடவுளான விநாயகரின் முக்கியமான திருவிழா விநாயகர் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கின்றோம். 

2 /5

வீடுகளை சுத்தப்படுத்தி, விநாயகருக்கு அலங்காரம் செய்து அவருக்கு அவல் பொரி, பழங்கள், மோதகம், கொழுக்கட்டை என படைத்து பிள்ளையாரை வணங்குகிறோம். அண்ணலின் பலம் தும்பிக்கையிலே! நம் பலம் அவன் மேல் வைத்த நம்பிக்கையிலே!

3 /5

ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாகவும், ஆடம்பரமாகவும் கொண்டாடப்படும். வெகு சிறப்பாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு ஆவணி மாதம் 25ஆம் தேதி செப்டம்பர் 10ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

4 /5

நாட்டையும், மக்களையும் காக்க இந்த ஆண்டு நாம் எளிமையாக விநாயகர் சிலைகளை வீட்டிலேயே வைத்து வணங்குவோம்.  

5 /5

கொரோனாவின் தாக்கத்தினால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாக கொண்டாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. கடவுள் வழிபாடு எந்த அளவிற்கு அவசியமோ அதே அளவிற்கு நமது உடல் ஆரோக்கியமும் அவசியம்.