Combination Of Alcohol And Medicine: நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிப்பவர்களில் சிலர் உண்ணும் மருந்து, மது அருந்தும்போது எதிர்விளைவை ஏற்படுத்தும். சில மருந்து மாத்திரைகள், அதிகமாக மது அருந்தினால், எதிர்மறையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்
ஆல்கஹால் மற்றும் சில மருந்துகளின் கலவையானது எதிர்மறையான இடைவினைகள், பாதகமான எதிர்விளைவுகளுக்கு காரணமாகும்
சில மருந்துகள் சாப்பிடும்போது மதுவை அருந்துவது என்பது பல மொசமான விளைவுகளுக்கான அறிகுறிகளை ஏற்படுத்தும்,
குமட்டல் மற்றும் வாந்தி, தூக்கம், தலைவலி, மயக்கம் என பல அறிகுறிகள் தோன்றலாம்
மருந்து + மது, கலவையானது மருந்தின் விளைவையோ அல்லது அருந்தும் மதுவின் விளைவையோ தீவிரப்படுத்தலாம். இது மருந்தின் செயல்திறனைக் குறைக்கலாம்
மலமிளக்கிகள் மற்றும் இருமல் சிரப்கள் போன்ற சில மருந்துகளிலும் ஆல்கஹால் இருக்கலாம். எனவே, தீவிரமான நோய் பாதிப்பு இருப்பவர்கள், வழக்கமான எந்தவொரு மருந்தையும் பயன்படுத்தும்போது, மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவது அவசியம் ஆகும்
மனச்சோர்வு மற்றும் கவலை மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் மது அருந்தினால், அதில் உள்ளஅமினோ அமிலமான டைரமைனுடன் இணைந்து MAOIகள் இரத்த அழுத்தத்தை ஆபத்தான முறையில் அதிகரிக்கச் செய்யலாம்.
மில்லியன் கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் நீரிழிவு மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆல்கஹால் சேர்ப்பது ஆபத்தான முறையில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.
இரத்த அழுத்தத்தில் திடீர் மாற்றங்கள், விரைவான இதயத் துடிப்பு, குமட்டல் மற்றும் வாந்தி என பல பிரச்சனைகள் எழலாம்