முக ஸ்டாலின் நேற்றைய அரசியல் வரலாறு 2092: முதல்வரை பாராட்டும் பார்த்திபன்

MK Stalin Lauds Parthiban: முழுப்படத்தையும் சிங்கிள் டேக்கில் எடுத்துள்ள இயக்குநர் ஆர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை பார்த்து பாராட்டினார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • Aug 02, 2022, 13:20 PM IST

இரவின் நிழல்: 96 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் இரவின் நிழல் படத்தை  ஒரே டேக்கில் உருவாக்கியுள்ளார் ஆர் பார்த்திபன். இந்த திரைப்படத்திற்கும், பார்திபனின் வித்தியாசமான முயற்சிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இது முதல்வரின், முன்னாள் நடிகரின் பாராட்டு மழை... பாராட்டு மழைக்கு பதிலாய் ”நேற்றைய அரசியல் வரலாறு  2092” என  முதல்வரை வித்தியாசமாய் பாராட்டினார் இயக்குநர் பார்த்திபன்...

மேலும் படிக்க | பார்த்திபனின் இரவின் நிழல் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

1 /6

திரு. மு. க ஸ்டாலின் அவர்கள், இயக்குனரும் நடிகருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தை கண்டுகளித்தார். திரைப்படத்தைப் பார்த்ததும் , முதல்வர் மு .க .ஸ்டாலின் பார்த்திபனின் இந்த  அசாத்தியமான சாதனை  முயற்சியை வெகுவாகப் பாராட்டினார். 

2 /6

 "இரவின் நிழல் திரைப்படம்  பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதெனில் அற்புதம் !" என்று பாராட்டி, பார்த்திபனையும்  படக்குழுவினரையும் வாழ்த்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்

3 /6

'நேற்றைய அரசியல் வரலாறு - 2092 என்ற தலைப்பில் முதல்வரின் சாதனைப் புத்தகத்தை பார்த்திபன் தனக்கே உரிய வித்தியாசமான பாணியில் வடிவமைத்து  முதல்வருக்கு பரிசளித்தார்.

4 /6

 முதல்வரின் பாராட்டு , தனக்கு மிகுந்த தெம்பளிப்பதாக கூறி நன்றி தெரிவித்தார் பார்த்திபன்

5 /6

இதுவரை இரவின் நிழல் திரைப்படம் 7 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது 

6 /6

இரவின் நிழல் திரைப்படம் வெற்றிகரமாக 4 வது வாரத்தில் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.