Cibil Score loan eligibility: கடன் பெற விரும்புபவர்கள் தங்கள் சிபில் ஸ்கோரை பராபரிக்க வேண்டியது மிக அவசியமாகும். மக்களின் தினசரி வாழ்க்கைச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, மக்கள் வீட்டுக் கடன், கார் கடன் வாங்க தனிநபர் கடன் ஆகியவற்றை வாங்குகிறார்கள். எனினும், இதற்கு மிக முக்கியமான விஷயம், நல்ல சிபில் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான். பல கடன் வழங்குநர்கள் 750 அல்லது அதற்கு மேலான சிபில் ஸ்கோர் இருக்க வேண்டும் என கேட்கின்றனர். கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவதற்கான சில சிறப்பு வழிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
உங்கள் சிபில் ஸ்கோர் உங்கள் கடன் தகுதியின் அடிப்படையில் அமைந்துள்ளது. உங்கள் சிபில் மதிப்பெண் நன்றாக இல்லை என்றால், நீங்கள் கடன் பெறுவதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். இத்தகைய சூழ்நிலையில், பல வங்கிகள் அல்லது கடன் வழங்கும் நிறுவனங்கள் குறைந்த சிபில் மதிப்பெண்ணுடன் குறைந்த கடன் தொகையை வழங்குகின்றன.
கிரெடிட் கார்டு எப்போதும் ஒரு குறிப்பிட்ட வரம்பைக் கொண்டுள்ளது. இது கடன் வரம்பு என்று அழைக்கப்படுகிறது. உங்கள் சிபில் ஸ்கோரைப் பராமரிக்க உங்கள் கிரெடிட் வரம்பில் 30%க்கு மேல் பயன்படுத்தக் கூடாது. கிரெடிட் கார்டில் இந்த வரம்பிற்கு மேல் நீங்கள் செலவு செய்தால், அதிகபட்ச கிரெடிட்டைப் பயன்படுத்தும் நபராக நீங்கள் பார்க்கப்படுவீர்கள். இது உங்கள் சிபில் ஸ்கோரில் தவறான தக்கத்தை ஏற்படுத்துகிறது.
கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிறந்த பதிவைக் கொண்ட ஒரு நபருக்கு நல்ல கிரெடிட் ஸ்கோர் இருக்கும். நீங்கள் இதுவரை எந்தக் கடனையும் வாங்கவில்லை என்றால், உங்கள் தேவைகளுக்காக நீங்கள் கடனைப் பெறலாம். சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்துவதால் சிபில் ஸ்கோரை மேம்படுத்தும்.
உங்கள் கிரெடிட் கார்டு கணக்கை எப்போதும் மூடவே கூடாது. இதனுடன் தொடர்ந்து ஷாப்பிங் செய்து பில்களையும் செலுத்துங்கள். இது தவிர, உங்கள் கூட்டுக் கணக்கை, சிபில் ஸ்கோரை மதிப்பாய்வு செய்ய வேண்டும். கூட்டுக் கடனாக இருந்தால், இஎம்ஐ செலுத்துவதில் இருவருக்கும் சமமான பங்கு இருக்கும். இது கிரெடிட் ஸ்கோரில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சிபில் ஸ்கோர் 300 முதல் 900 எண்கள் வரை இருக்கும். சிபில் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருந்தால் கடன் பெறுவது எளிதாக இருக்கும். சிபில் ஸ்கோர் எவ்வளவு சிறப்பாக இருக்கிறதோ, அவ்வளவு எளிதாக கடன் பெற முடியும். சிபில் ஸ்கோர் 24 மாத கடன் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.