சிஎஸ்கே ஏலத்தில் தூக்கப்போகும் முக்கிய வீரர்... எத்தனை கோடி போனாலும் இந்த முறை மிஸ் ஆகாது!

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் (IPL 2025 Mega Auction) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த இந்திய வீரரை தவறவிடாமல் பெரிய தொகை கொடுத்தும் கூட அணிக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கும். அந்த வீரர் யார் என்றும் அவர் குறித்தும் இங்கு காணலாம்.

  • Aug 05, 2024, 17:20 PM IST

மெகா ஏலம் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எந்தெந்த வீரர்களை அணிகள் தக்கவைக்கின்றன என்பதும் இன்னும் சரியாக தெரியாத சூழலிலும் கூட ஐபிஎல் 2025 தொடர் குறித்த பேச்சுகள் தொடர்ந்து இருந்து வருகின்றது. 

 

 

 

1 /8

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) 2010, 2011, 2018, 2021, 2023 ஆகிய ஐந்து சீசன்களிலும் ஐபிஎல் சாம்பியனாகி கோப்பைகளை வென்றுள்ளது. இந்த முறையும் மகேந்திர சிங் தோனி தலைமையில்தான் சிஎஸ்கே பெற்றது. இதுமட்டுமின்றி, 2010, 2014ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன்ஸ் லீக் தொடரையும் கைப்பற்றியது. இதுவும் தோனியின் (Mahendra Singh) தலைமையில்தான்.   

2 /8

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இத்தகைய பெரும் வெற்றிகளை குவிக்க அந்த அணியின் சரியான திட்டமிடலும், வீரர்கள் தேர்வும் எனலாம். சிஎஸ்கே குறிவச்சா அது தப்பாது என்பது பல வல்லுநர்களால் ஏற்கப்படும் ஒன்றாக உள்ளது.   

3 /8

பல அணிகளால் வேண்டாம் என ஒதுக்கப்பட்ட வீரர்களை கூட, அவர்களின் கடைசி காலத்தில் அணிக்குள் கொண்டு வந்து அவர்களுக்கு கோப்பையை முத்தமிட கொடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்தான். அப்படியிருக்க, வரும் ஐபிஎல் 2025 தொடரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் கடுமையாக எதிர்பார்த்து வருகிறது. 

4 /8

2025 தொடரில் தோனி மீண்டும் விளையாடும் ஆர்வமுடன் இருப்பதாக தெரிகிறது. அவரை Uncapped வீரர்கள் வரிசையில் இடம்பெறவைத்து, அதன் மூலம் தக்கவைக்கவும் சிஎஸ்கே திட்டமிடுகிறது. இதனால், அவரை குறைந்த தொகையில் சிஎஸ்கேவால் தக்கவைக்க இயலும்.   

5 /8

அதுமட்டுமின்றி, தோனிக்கு பின் அணியின் எதிர்காலம் குறித்தும் சிஎஸ்கே இந்த ஏலத்தில் திட்டமிட்டு வீரர்களை எடுக்க நினைக்கும்... அந்த வகையில், சிஎஸ்கே பல ஏலத்தில் முயன்று, இப்போது வரை அவரை அணியில் எடுக்க முடியாமல் போனது என்றால் அது தமிழக வீரர் ஷாருக் கான்தான் (Shahrukh Khan)  

6 /8

இவருக்காக கடந்த 2022 மினி ஏலத்தில் சிஎஸ்கே கடைசி வரை போராடி தோற்றது எனலாம். பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை அப்போது ரூ.9 கோடிக்கு எடுத்தது. 2023இல் ஷாருக்கான் ரூ.7.40 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் எடுத்தது. இருப்பினும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் அப்போது முயற்சித்தது.   

7 /8

எனவே, தோனி சென்று பின்னர் அவருடைய அதிரடி பினிஷிங் ரோலை கைக்கொள்ளவும், ஒருவேளை எதிர்காலத்தில் கேப்டன்ஸி மாற்றப்பட வேண்டும் என்றால் அதற்கும் ஷாருக்கானை சிஎஸ்கே நிச்சயம் ஏலத்தில் எடுக்க முயற்சிக்கும். இவர் பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் கூட சிறப்பாக செயல்படுகிறார்.   

8 /8

டிஎன்பிஎல் தொடரில் (TNPL 2024) லைகா கோவை கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஷாருக்கான் 2022, 2023 சீசன்களில் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். மேலும், 2024 தொடரில் இறுதிப்போட்டி வரை அழைத்து வந்துள்ளார். மேலும், 2024 சீசனில் 7 இன்னிங்ஸ்களில் 225 ரன்களை அடித்தது மட்டுமின்றி மொத்தம் 13 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார். இதன்மூலம், டிஎன்பிஎல் 2024 தொடரின் தொடர் நாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.