பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் பயணிக்கும் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் நடந்து கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது.
மாணவர்களுக்கு நேரடியாகவும், பள்ளிகளுக்கு நேரில் சென்று கலந்தாய்வு கூட்டம் நடத்தி அறிவுரை கூறிய பிறகும், சில மாணவர்கள் தொடர்ந்து கலாட்டா செய்து வருவதாக புகார்.
"பஸ் டே" (Bus Day in Tamil Nadu) என்ற பெயரில் பேருந்து மீது ஏறி ஆடுவதும், சில சோகச் சம்பவங்கள் அரங்கேறுவதும் வாடிக்கை.
சென்னை புரசைவாக்கத்தில் 29A வழித்தடத்தில் பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்து மீது ஏறி அட்டகாசம் செய்துள்ளனர்.
மாணவர்கள் தினமும் பேருந்துகளில் உள்ளே வந்து பயணம் செய்யாமல் படிகள் மற்றும் ஜன்னல் கம்பிகளில் தொங்கிக்கொண்டும் பயணம் செய்கின்றனர்.
பேருந்துகளில் பயணிக்கும் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் மாணவர்கள் நடந்து கொள்கின்றனர்.
இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.