ஜியோ அதிரடி மலிவுத்திட்டம்: 3ஜிபி டேட்டாவுடன் இதுவும் இலவசம்

ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் அதிக நன்மைகளுடன் கூடிய திட்டங்களை வழங்குகிறது. ஜியோ பல பிரபலமான திட்டங்களை கொண்டுள்ளது. இந்த திட்டங்களின் பயன்பாடு பயனர்களிடையே அதிகமாக உள்ளது. ஜியோவில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி, 2 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டா வழங்கும் பல திட்டங்கள் உள்ளன. 
ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா கொண்ட ஜியோவின் திட்டங்கள் மிகவும் பிரபலமானவை. மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தி வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது. இந்த பதிவில் ஜியோவின் மலிவான ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். இவற்றில் பயனர்கள் ஒவ்வொரு நாளும் 3 ஜிபி அதிவேக இணையத்துடன் பல அற்புதமான நன்மைகளையும் பெறுவார்கள். 

1 /4

ரூ. 419 விலையுள்ள இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் தினமும் 3 ஜிபி இணையத்தைப் பெறுவார்கள். அதாவது மொத்தமாக இந்த திட்டத்தில் 84 ஜிபி டேட்டாவைப் பெறலாம். இது மட்டுமல்லாமல், இந்த திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளும் கிடைக்கும். 

2 /4

இந்த திட்டமும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகின்றது. இந்த திட்டத்திலும் பயனர்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. நிறுவனம் 6ஜிபி கூடுதல் டேட்டாவை பயனர்களுக்கு வழங்குவதால் இந்த திட்டத்தின் விலை ரூ.601 ஆகும். இது மட்டுமின்றி, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய வசதிகளும் இதில் கிடைக்கும். மேலும், OTT நன்மைகளைப் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தாவும் கிடைக்கும். 

3 /4

முந்தைய இரண்டு திட்டங்களைக் காட்டிலும், இந்த திட்டம் இரு மடங்கை விட அதிகமாக, அதாவது 84 நாட்களுக்கான வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கும். இதனுடன் அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளையும் பெறுவீர்கள். இந்த திட்டம் ஜியோ கிளவுட், ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி போன்ற அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கும் சந்தாவை வழங்குகிறது.

4 /4

இவைதான் அட்டகாசமான 3ஜிபி தினசரி டேட்டாவுடன் கூடிய ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்கள். இவற்றை நீங்கள் ஜியோவின் இணையதளம், ஜியோவின் மொபைல் ஆப் அல்லது உங்கள் அருகிலுள்ள ஜியோ ஸ்டோர் மூலம் பெறலாம்.