ஒரு ஸ்கூட்டரின் விலையில் 2 மின்சார ஸ்கூட்டர்களை வாங்கலாம்: அசத்தும் Komaki

Cheapest Electric Scooter:நாட்டின் மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான கோமகி கடந்த ஆண்டு ஜூன் மாதம் XGT-X1 மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இப்போது நிறுவனம் இந்த ஆண்டு அதன் விலையிலும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இப்போது லித்தியம் அயன் பேட்டரியுடன் இதன் விலை ரூ. 60,000 ஆகவும் ஜெல் பேட்டரியுடன் ரூ. 45,000 ஆகவும் உள்ளது.

1 /4

Komaki XGT-X1-ல் டெலஸ்கோபிக் ஷாக்கர்ஸ், ரிமோட் லாக், திருட்டு எதிர்ப்பு லாக் அமைப்பு, ஒத்திசைக்கப்பட்ட பிரேக்கிங் அமைப்பு போன்ற பல அம்சங்கள் உள்ளன. கோமகி அதன் லித்தியம் அயன் பேட்டரிக்கு 2+1 (1 வருட சேவை உத்தரவாதம்) ஆண்டு உத்தரவாதத்தையும், டெட்-ஆசிட் பேட்டரிக்கு ஒரு வருட உத்தரவாதத்தையும் வழங்குகிறது. XGT-X1-ல் ஒரு பெரிய டிரங்க் பகுதி இருக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. இதில் ஒரு ஸ்மார்ட் டாஷ்போர்டும் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரிமோட் டயக்னஸ்டிக்ஸிற்கான சென்சாரும் உள்ளது. இது ரிமோட் லாக் உடன் வருகிறது. (Photo: Komaki.in)

2 /4

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஈகோ முறையில் 100 கிமீ முதல் 120 கிமீ வரை செல்லும் திறன் கொண்டது. இது வாடிக்கையாளர்களை ஈர்கும் அம்சமாக உள்ளது. (Photo: Komaki.in)

3 /4

கோமகி மின்சாரப் பிரிவின் இயக்குனர் குஞ்சன் மல்ஹோத்ரா, “வரும் காலங்களில் இந்த மின்சார-ஸ்கூட்டர் அதிக வாடிக்கையாளர்களைப் பெறும். குறிப்பாக நாட்டில் எரிபொருள் விலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், இது நிச்சயமாக நடக்கும்.” என்று கூறினார். (Photo: Komaki.in)

4 /4

வழக்கமாக, ஆக்டிவா ஸ்கூட்டரின் விலை சுமார் ரூ. 85,000 ஆக இருக்கும். ஆனால் கோமகி XGT-X1 இன் புதிய விலைகள் மிகவும் குறைவாக இருப்பதால் வாங்குபவர்கள் ஆக்டிவாவின் அதே விலைக்கு 2 கோமகி ஸ்கூட்டர்களைப் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. (Photo: Komaki.in)