மலிவு விலையில் ஜியோவின் ஜாக்பாட் திட்டம்... வாடிக்கையாளர்களுக்கு குஷிதான்!

Jio Cheap Jackpot Plans: ஒரு மாதத்திற்குள்ளான வேலிடிட்டி உடன் வரம்பற்ற காலிங், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் பலன்களை வழங்கும் விலை மலிவான ஜியோ ரீசார்ஜ் திட்டங்களை இதில் காணலாம். 

  • Nov 21, 2023, 18:42 PM IST

 

 

 

 

 

 

 

 

1 /7

ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பில் தனிக்காட்டு ராஜாவாக திகழ்ந்து வருகிறது எனலாம். ஏர்டெல், வோடோஃபோன் - ஐடியா (Vi), பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் ஜியோவுடன் போட்டிப்போட்டு சந்தையில் நிற்க கடும் முயற்சியை மேற்கொள்கிறது.

2 /7

இருப்பினும் ஜியோ நிறுவனம் அத்தனையையும் முறியடித்து அனைத்து தரப்பினருக்குமான பல ரீசார்ஜ் திட்டங்களை பல்வேறு விலை அடுக்குகளில் வழங்குகிறது.

3 /7

மேலும், ஜியோ நிறுவனம் மாதாமாதம் புதிய பிளான்களை அறிவித்து வருகிறது. அதில் வரம்பற்ற காலிங், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் பலன்கள் சார்ந்தும் ஜியோ பிளான்களை அறிவிக்கும். அந்த வகையில் ஒரு மாதத்திற்குள்ளான வேலிடிட்டி உள்ள இரண்டு பிளான்களை ஜியோ அறிவித்துள்ளது.

4 /7

149 ரூபாய் ரீசார்ஜ் பிளான்: இதுதான் ஜியோவின் மலிவான ரீசார்ஜ் பிளான்களில் ஒன்றாகும். இந்த பிளானில் வாடிக்கையாளர்கள் தினமும் 1ஜிபி டேட்டாவுடன் வரம்பற்ற காலிங் பனலை பெறுவார்கள்.

5 /7

இந்த பிளானின் வேலிடிட்டி 20 நாள்களாகும். இதனால் 20 நாள்களுக்கு மொத்தம் 20ஜிபி டேட்டா கிடைக்கும். 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும். இதனை பேடிஎம் மற்றும் ஜியோ செயலி மூலம் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். 

6 /7

179 ரூபாய் ரீசார்ஜ் பிளான்: இந்த திட்டமும் தினமும் 1ஜிபி டேட்டாவுடன் வரம்பற்ற காலிங் வசதியை அளிக்கிறது. 

7 /7

இதன் வேலிடிட்டி 24 நாள்களாகும். எனவே, 24 நாள்களுக்கு மொத்தம் 24ஜிபி டேட்டா கிடைக்கும். இதிலும் 100 எஸ்எம்எஸ் இலவசமாகும். இதனை பேடிஎம் மற்றும் ஜியோ செயலி மூலம் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.