Chaturmas Sleep Of Lord Vishnu 2024 : இன்று முதல் தொடங்கும் சதுர்மாதத்தில் ஸ்ரீ விஷ்ணு உறக்க நிலைக்கு செல்கிறார். ஆடி மாதம் தொடங்கி, கார்த்திகை மாதம் வரை ஸ்ரீஹரி யோக நித்திரையில் சயனம் கொண்டிருப்பார்
Lord Shiva Duties In Chaturmas : பாற்கடலில் பள்ளிகொண்டு நான்கு மாதங்கள் பகவான் விஷ்ணு நித்திரை செய்தால், அவரது கடமைகளுக்கு பொறுப்பேற்கிறார் சிவபெருமான்...
ஜூலை 17 ஆம் தேதி தேவசயனி ஏகாதசியில் இருந்து சதுர்மாஸ் தொடங்கிவிட்டது. இந்த சதுர்மாதங்களில் விஷ்ணு 4 மாதங்கள் பாற்கடலில் பள்ளிக்கொண்டிருப்பார். மகாவிஷ்ணு தூங்கிய பிறகு, பக்தர்களின் கோரிக்கைகளை யார் நிறைவேற்றுவார்கள் என்ற கேள்வி எழுகிறதா?
காக்கும் கடவுள் யோக நித்திரையில் ஆழ்ந்திருக்கும் காலம் ஆடி மாதம் முதல் ஐப்பசி மாதம் வரை 4 மாதங்களாக இருக்கும்
சதுர்மாதத்தில் விஷ்ணுவின் வேலையையும் சேர்த்து பார்க்கும் சிவன், சங்கரநாராயணராக வணங்கப்படுகிறார்
இந்த சாதுர்மாதத்தில் விஷ்ணு மட்டுமல்ல, பிற தெய்வங்களும் தேவர்களுக்கும் யோகநித்திரையில் இருப்பதாக நம்பிக்கை.
ஜூலை 17 ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 12 ஆம் தேதி தேவதானி ஏகாதசி அன்று சாதுர்மாஸ் முடிவடைகிறது.
நவம்பர் 12ம் தேதியன்று தேவுதானி ஏகாதசி நாளில், விஷ்ணுவுடன், மற்ற தெய்வங்களும் தேவர்களும் யோக நித்திரையிலிருந்து வெளியேறி தங்கள் கடமையை செய்யத் தொடங்குவார்கள்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது