சார்லியில் ஊர் சுற்றிய பார்வதி இப்போது எப்படி இருக்கிறார்?

மலையாள திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பார்வதியின் பிறந்தநாள் இன்று.

 

நடிகர் மற்றும் படத்தின் பிரமாண்டகளுக்காக கமிட்டாகாமல், கதைக்காக நடிப்பவர் பார்வதி.

 

1 /5

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பார்வதிக்கு மலையாளம் மட்டுமல்ல, தமிழ் உள்ளிட்ட பன்மொழி ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

2 /5

கதைக்காக படத்தை தேர்ந்தெடுத்து நடிப்பது மட்டுமே அவருடைய பாணி. தமிழில் தனுஷூக்கு ஜோடியாக மரியானில் நடித்த அவர், கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். சோகத்தையும், ஏக்கத்தையும் அவருடைய கதாப்பாத்திரம் எளிதாக கடத்திவிடும்.

3 /5

சார்லியில் ஊர் சுற்றும் நாடோடி வாழ்க்கையை விரும்பும் பெண்ணாக துல்கருடன் நடித்திருப்பார். சுட்டியாக, புதிய விஷயங்களை தைரியமாக முயற்சிக்கும் பெண்ணாக வாழ்ந்திருப்பார்.

4 /5

நாம் வாழ்க்கையை ஏன் வாழ்கிறோம்? என்பதை டெஸ்ஸோ சொல்லிவிடுவாள். ஒரு பெண்ணுக்கே இருக்கும் இலக்கணங்களை எல்லாம் உடைத்துவிடுவாள்.

5 /5

அவள் விரும்பும் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்து ஊர் சுற்றுவாள். அதில் அவளுக்கு வெற்றியும் கிட்டும். இப்படி, பெங்களூரு டேஸ், உயரே, கூடே உள்ளிட்ட படங்களிலும் தனித்து நின்றிருப்பார் பார்வதி. பொதுவெளியிலும் பெண்ணுரிமைக்காக குரல் கொடுக்கும் அவருக்கு, பட வாய்ப்புகள் ஏன் குறைந்தது என சொல்லித் தெரியவேண்டியதில்லை.