Changes from 1st May: இன்று முதல் நடக்கும் இந்த பெரிய மாற்றங்கள்

ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகளை மத்திய, மாநில அளவில் அறிவிக்கப்படும். இதன்படி மே மாதம் மாறியுள்ள விதி முறைகள் பற்றி இப்போது பார்க்கலாம். எனவே உங்கள் பாக்கெட்டைப் பாதிக்கப் போகும் அந்த விஷயங்கள் என்னவென்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

1 /5

வர்த்தக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர்களின் விலையை அரசு எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி மே 1ம் தேதி முதல் டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.2253ல் இருந்து ரூ.2355.50 ஆக உயர்ந்துள்ளது.

2 /5

ஏப்ரல் மாதம், ஐபிஓக்களுக்கு UPI மூலம் பணம் செலுத்துவதற்கான வரம்பை அதிகரிக்க செபி முடிவு செய்திருந்தது. இந்த விதி மே 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இப்போது நீங்கள் UPI உதவியுடன் எந்த ஐபிஓவிலும் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முன்னதாக இந்த வரம்பு ரூ.2 லட்சமாக இருந்தது.

3 /5

எல்பிஜி சிலிண்டர்கள் தவிர, ஜெட் எரிபொருளும் மே 1 முதல் விலை உயர்ந்துள்ளது. ஏர் டர்பைன் எரிபொருளின் (ஏடிஎஃப்) விலை டெல்லியில் கிலோ லிட்டருக்கு ரூ.116851.46 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக ஏப்ரல் 16ஆம் தேதியும் ஏடிஎஃப் விலை அதிகரித்தது.

4 /5

மே 1 முதல் பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் சுங்கவரி விதிக்கப்படுகிறது. இந்த அதிவேக நெடுஞ்சாலையில் சில சுங்க வரி ரூ.833 ஆக இருக்கும். ஆனால் 25 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு நீங்கள் ரூ.625 கட்டணம் செலுத்த வேண்டும். உ.பி., தேர்தல் காரணமாக, இந்த விரைவுச்சாலையில் இதுவரை கட்டணம் இல்லாமல் இருந்தது.

5 /5

மே 1 முதல் மே 4 வரை, தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இருப்பினும், இந்த விடுமுறைகள் வெவ்வேறு மாநிலங்களுக்கு ஏற்ப இருக்கும். இது தவிர, மே மாதத்தில் சனி மற்றும் ஞாயிறு உட்பட மொத்தம் 11 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை.