பிளிப்கார்ட்டில் சலுகை... ₹10,000 விலையில் ஸ்மார்ட்போன்கள் வாங்க அரிய வாய்ப்பு!

ஸ்மார்போன்களை பயன்படுத்தாத நபர்களை பார்ப்பது அரிது. இந்நிலையில், பிளப்கார்டில், தள்ளுபடி சலுகை காரணமாக 10,000 ரூபாய்க்கு குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

1 /5

Poco C51 போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இதில் 8எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 6.52 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. கைபேசியில் 5000mAh பேட்டரி மற்றும் Helio G36 செயலி பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.6,999. HDFC வங்கி கார்டுகளுக்கு 750 ரூபாய் தள்ளுபடி உண்டு.

2 /5

Samsung Galaxy M04 போனில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 13MP இரட்டை பின்புற கேமரா மற்றும் MediaTek Helio P35 செயலியைக் கொண்டுள்ளது. இது தவிர, இந்த போன் 8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பகத்துடன் வருகிறது. இதன் விலை 7,799 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதில் HDFC வங்கி அட்டையில் 1250 ரூபாய் தள்ளுபடி உள்ளது.

3 /5

Infinix Hot 20 Play ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் உடன் 64ஜிபி உள் சேமிப்பு உள்ளது. தொலைபேசி 6.82 இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் 13MP AI பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் MediaTek G37 செயலி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் Flipkartல் ரூ.8,199க்கு கிடைக்கிறது. ஆக்சிஸ் வங்கி கார்டுகளுடன் போனில் ரூ.750 வரை தள்ளுபடி உள்ளது.

4 /5

Redmi 10 ஃபோன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரை சேமிப்பகத்தைப் பெறுகிறது. இதில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 6000எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த போனில் Qualcomm Snapdragon 680 செயலி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 50எம்பி டூயல் ரியர் கேமரா உள்ளது. இதன் விலை 9,499 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. HDFC வங்கி கார்டுகளுக்கு 750 ரூபாய் தள்ளுபடி உண்டு.  

5 /5

Realme C55 போனில் 128ஜிபி வரை சேமிப்பகம் மற்றும் 8ஜிபி வரை ரேம் உள்ளது. போனில் 6.72 இன்ச் டிஸ்ப்ளேவும் கொடுக்கப்பட்டுள்ளது. சாதனம் 5000mAh பேட்டரி மற்றும் Helio G88 செயலியைப் பெறுகிறது. போனில் 64MP டூயல் ரியர் கேமரா உள்ளது. போனின் விலை ரூ.10,999ல் இருந்து, ரூ.10,000க்கு சற்று அதிகமாகும். இருப்பினும், தொலைபேசியில் HDFC வங்கி கார்டுகளுக்கு ரூ.500 தள்ளுபடி உள்ளது.