துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் அப்டேட்! சிவகார்த்திகேயன் படத்துடன் மோதல்?

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்டுள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

1 /5

விக்ரம் நடிப்பில் நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்டுள்ள ஸ்பை த்ரில்லர் 'துருவ நட்சத்திரம்' படம், விக்ரமின் சமீபத்திய படமான 'தங்கலான்' படத்திற்கு முன்னதாகவே வெளியாகவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  

2 /5

'துருவ நட்சத்திரம்' படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும், தற்போது சீயான் விக்ரம் டப்பிங் பேசி முடித்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.  

3 /5

'துருவ நட்சத்திரம்' படத்தை ஜூலை 14-ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கும் நிலையில், அதே தினத்தில் சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படமும் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் மோதலை ஏற்படுத்துப்போவதாக கூறப்படுகிறது.  

4 /5

'துருவ நட்சத்திரம்' படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  

5 /5

'துருவ நட்சத்திரம்' படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, சிம்ரன், பார்த்திபன், டிடி, அர்ஜுன் தாஸ், வம்சி கிருஷ்ணா, ராதிகா சரத்குமார், அபிராமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.