Bharat Rice @₹29 From Today: மத்திய அரசின் மானிய விலை பாரத் அரிசி விற்பனை திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது. ஒரு கிலோ அரிசியை 29 ரூபாய்க்கு என்ற விலையில் அரிசி விற்பனைக்குக் கிடைக்கும்...
விலைவாசியை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக மத்திய அரசு குறைந்த விலையில் அரிசி விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது...
மேலும் படிக்க | மானிய விலையில் பாரத் அரிசி... கிலோ ₹29 மட்டுமே... அடுத்த வாரம் முதல் விற்பனை!
பண வீக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள மானிய விலை அரிசி விற்பனை திட்ட முன் முயற்சியின் கீழ், மானிய விலையில் பாரத் அரிசி என்ற பெயரில், அரிசி விற்பனை செய்யப்படுகிறது
விலைவாசியை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அரசு இதுபோன்ற மானிய விலை பொருட்களை விற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது
அரிசியின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் அரிசியின் விலை 15 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த விற்பனை தொடங்கப்பட்டுள்ளது
NAFED எனப்படும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் NCCF எனப்படும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் மானிய விலை பாரத் அரிசியை மத்திய அரசு விற்பனை செய்கிறது
பாரத் அரிசி 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளில் விற்கப்படுகிறது
மானிய விலை அரிசி திட்டத்திற்கு அரசு 5 லட்சம் டன் அரிசி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு, இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, கேந்திரிய பண்டார் விற்பனை நிலையங்கள் மற்றும் மொபைல் வேன்களின் மூலம் பாரத் பிராண்ட் அரிசி விற்பனை செய்யப்படும்