ரஜத் பட்டிதரை தூக்கலாமா வேண்டாமா... ரோஹித்துக்கு டிவில்லியர்ஸ் அட்வைஸ்!

Rajat Patidar: இந்தியா - இங்கிலாந்து அணிக்கு இடையிலான 5ஆவது போட்டியில் ரஜத் பட்டிதாரை சேர்க்கலாமா வேண்டாமா என்பது குறித்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ், இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அறிவுரை கூறி உள்ளார்.

  • Mar 05, 2024, 00:48 AM IST

 

 

1 /7

இந்தியா - இங்கிலாந்து அணிக்கு இடையிலான தொடரின் சம்பிரதாய போட்டியான 5ஆவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 7ஆம் தேதி ஹிமாச்சல் பிரதேசம் தரம்சாலாவில் நடைபெற தொடங்க உள்ளது.   

2 /7

இந்திய அணி ஏற்கெனவே தொடரை வென்றிருந்தாலும் இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறை மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தரவரிசையில் புள்ளிகளை பெறவும், கடைசி போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. 

3 /7

கேஎல் ராகுல் காயம் காரணமாக ஐந்தாவது போட்டியில் இருந்தும் விலகினார். பும்ரா மீண்டும் இந்த அணியில் இணைந்துள்ளார். எனவே இந்திய அணியின் மிடில் ஆர்டரில் மீண்டும் மாற்றம் இருக்கும் கூறப்பட்டது. மிடில் ஆர்டரில் ரஜத் பட்டிதார் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், அவருக்கு பதில் தேவ்தத் படிக்கலுக்கு வரும் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்பட்டது.   

4 /7

கடந்த மூன்று போட்டிகளில், அதாவது 6 இன்னிங்ஸில் 63 ரன்களையே அடித்துள்ளார். அதிகபட்சமாக 32 ரன்களை அவர் அடித்தார். சராசரி வெறும் 10.5 தான். எனவேதான், அவருக்கு பதில் தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.   

5 /7

இந்நிலையில், ஏபி டிவில்லியர்ஸ், "ரஜத் படிதாருக்கு இது சிறப்பான தொடர் இல்லை. ஆனால் இந்திய அணி மற்றும் தற்போது அங்கு ஆரோக்கியமான போக்கு நிலவுவதாலும், வெற்றியை குவிப்பதாலும் ரஜத் பட்டிதாருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு வழங்கலாம்" என்றார்.   

6 /7

மேலும் அவர் ரோஹித் மற்றும் டிராவிட்டுக்கு,"படிதாரின் அணுகுமுறை கவரும்படி இருந்தால், டிரஸ்ஸிங் அறையில் அவர் குறிப்பிடும்படி இருந்தால், அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு வழங்கலாம்" என அறிவுரை வழங்கினார்.   

7 /7

ரஜத் பட்டிதார் முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. விராட் கோலி தொடரில் இருந்து விலகிய நிலையில், ரஜத் பட்டிதாருக்குதான் முதலில் வாய்ப்பு வழங்கப்பட்டது.