சுகர் இருந்தா சரக்கு அடிக்கலாமா கூடாதா...? உண்மை இதோ

Diabetes: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் மது அருந்தலாமா என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் உள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு. மது அருந்துவதை ஊக்கப்படுத்தவே கூடாது. மது உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும்.

1 /8

மது அருந்தும் பழக்கம் பலருக்கு இருந்தாலும், நீரிழிவு நோயாளிகள் இந்த பழக்கத்தை வைத்திருந்தால் இது அவர்களிடன் உடல்நலனுக்கு கூடுதல் கெடுதலை விளைவிக்கும் என்கின்றனர்.   

2 /8

அதாவது, நீரிழிவு நோயாளிகள் எந்த விதமான சூழ்நிலையிலும் நிச்சயம் மது அருந்தவே கூடாது. ஏற்கெனவே உடல்நலன் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் காரியம் ஆகிவிடும்.   

3 /8

அதேபோல், அளவாக மது அருந்தினால் எந்த வித பிரச்னையும் இல்லை சுகர் நோயாளிகள் நினைப்பதும் முற்றிலும் தவறானது. அது கட்டுக்கதைதான்.   

4 /8

நீரிழிவு நோயாளிகள் மது அருந்தும்பட்சத்தில் அவர்களின் ரத்த சர்க்கரை அளவு சுமார் 30 மடங்கு உயரும் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.   

5 /8

Diabetes Care Journal எனப்படும் மருத்துவ இதழ் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியிட்ட கட்டுரையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

6 /8

நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்புகள் சேதம் அடையும் ஆபத்துகள் அதிகம் இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.   

7 /8

அவர்கள் மது அருந்தினால் அந்த ஆபத்து இன்னும் அதிகரிக்கும். சுகர் இருப்பவர்கள் மது குடித்தால் மிகவும் நுண்ணிய நரம்புகளும் பாதிக்கப்படும் அபாயம் அதிகரிக்கும்.   

8 /8

அப்படியிருக்க சிறிய அளவில் கூட நீரிழிவு நோயாளிகள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.