Motorola Edge 50 Sale : மோட்டோரோலா எட்ஜ் 50 கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இன்று அதாவது ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வந்தது...
ஜங்கிள் கிரீன், குவாலா கிரே மற்றும் பீச் ஃபட்ஜ் என மூன்று வண்ணங்களில் மோட்டரோலா எட்ஜ் 50 கிடைக்கிறது
மோட்டோரோலாவின் சமீபத்திய ஸ்மார்ட்போன் மோட்டோரோலா எட்ஜ் 50 இன் விற்பனை மதியம் 12 மணி முதல் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான பிளிப்கார்ட்டில் தொடங்கியது
மோட்டரோலா எட்ஜ் 50 போனின் விலை ரூ.27,999. Axis மற்றும் IDFC பேங்க் கார்டுகளைப் பயன்படுத்தினால் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, ரூ.1,371 EMIஇல் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்
மோட்டோரோலாவின் புதிய மொபைல் போனில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 32எம்பி கேமரா உள்ளது. ஃபோனில் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 1 சிப் மற்றும் 5000எம்ஏஎச் வலுவான பேட்டரி உள்ளது. கைபேசியில் 50MP பின்புற கேமராவும் உள்ளது.
எட்ஜ் 50 ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான இயங்குதளத்தில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் சூப்பர் எச்டி பிளஸ் போல்ட் டிஸ்ப்ளே உள்ளது, இதன் ரெசல்யூஷன் 2712 x 1220 பிக்சல்கள், ரெஃப்ரெஷ் ரேட் 120 ஹெர்ட்ஸ் மற்றும் பீக் பிரைட்னஸ் 600 நிட்ஸ் கொண்ட போன் இது
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகத்துடன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 1 செயலியைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சம் இருப்பதால் டேட்டாவை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். சிறந்த புகைப்படங்களைக் கிளிக் செய்ய சாதனத்தில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 50 போன் 5000எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இது 68W ஃபாஸ்ட் சார்ஜிங், இரட்டை சிம் ஸ்லாட், வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இது தவிர, Dolby Atmos பொருத்தப்பட்ட இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளன.
பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவலின் உண்மைத்தன்மைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது