இவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்: சூரியன் அருளால் இந்த ராசிகளுக்கு பொற்காலம்

Sun Transit: அனைத்து கிரகங்களின் ராஜாவான சூரியன் தன்னுடைய ராசியான சிம்ம ராசியில் இருக்கிறார். செப்டம்பர் 17 வரை அவர் இந்த ராசியில் இருப்பார். சூரியபகவானின் ஆசி பெற்ற ராசிக்காரர்களுக்கு, சூரியனை போலவே அதிர்ஷ்டமும் பிரகாசிக்கும் என்று நம்பப்படுகிறது. இவர்களுக்கு எந்த வகையிலும் எந்த குறையும் இருக்காது. இவர்களுக்கு சூரியனின் அருளால் செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு, ஐஸ்வர்யம் அனைத்தும் கிடைக்கும். இவர்களுக்கு எந்த வித பிரச்சனையும் இருக்காது. சிம்ம ராசியில் சூரியனின் சஞ்சாரம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் சில குறிப்பிட்ட ராசிகளுக்கு வரும் நாட்கள் முகவும் அனுகூலமாக இருக்கவுள்ளது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /4

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மிதுன ராசிக்காரர்கள் லாபம் அடைவார்கள். மனம் அமைதியாக இருக்கும். பணப்பிரச்சினை உள்ளவர்களுக்கு நண்பர்களிடமிருந்து பண உதவி கிடைக்கும். லாபத்திற்கான வாய்ப்புகள் அமையும். இந்த காலகட்டத்தில் உங்கள் பேச்சால் பிறரை கவர்ந்து விடுவீர்கள். உங்கள் பணிகள் சுலபமாக முடியும். 

2 /4

சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியன் அருளால் இந்த காலம் மிகவும் நல்ல காலமாக இருக்கும். வியாபாரம் பெருகும். எழுதுவதிலும் படிப்பிலும் நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் சில நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். உங்களது இனிமையான குரலால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் / மனைவி, குழந்தைகளுக்கு இடையே அன்பு அத்கரிக்கும். அமைதியான சூழல் நிலவும். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

3 /4

விருச்சிக ராசிக்காரர்கள் நம்பிக்கையுடன் இருப்பார்கள். வருமானம் அதிகரிக்கும். பெற்றோருடன் நேரத்தை செலவிட முடியும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். இந்த காலத்தில், உங்களுக்கு ​​நல்ல செய்திகள் கிடைத்து மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படும். வேலை மாற வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் வேலையில் மாற்றம் காணலாம்.  

4 /4

தனுசு ராசிக்காரர்கள் மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இதன் காரணமாக கணவன் மற்றும் மனைவி இடையேயான உறவு இனிமையாக இருக்கும். மாணவர்களுக்கு தேர்வுகளில் நல்ல வெற்றி கிடைக்கும். படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பால் ஆதாயம் அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.  (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)