குடியரசு தினத்தன்று விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டிடங்கள்

73வது குடியரசு தினத்தன்று, நாடு முழுவதும் உள்ள முக்கிய கட்டிடங்கள் சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வண்ணமயமான விளக்குகளுடன், பல்வேறு பரிணாமங்களைக் காட்டி மனதை மகிழ்வித்த குடியரசு தின சிறப்பு அலங்காரங்கள்...

1 /6

சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் ரயில் நிலையத்தின் பிரமாண்ட கட்டிடம் மூவர்ணக் கொடியின் ஒளியில் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

2 /6

மேற்கு வங்கத்தில் உள்ள ராஜ்பவனும் மின்விளக்குகளால் ஜொலிக்கிறது.

3 /6

ஜான்சி லக்ஷ்மிபாய் ரயில் நிலையம் ஜான்சி வீராங்கனை லக்ஷ்மிபாய் ரயில் நிலையம் என்று அழைக்கப்படும் ஜான்சி ரயில் நிலையம் அற்புதமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

4 /6

ஜம்மு ரயில் நிலையம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு தாவி ரயில் நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு, ரயில் நிலைய கட்டிடம் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

5 /6

இந்தூர் விமான நிலையம் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் விமான நிலையமும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

6 /6

குஜராத்தில் உள்ள அரசு கட்டிடங்களும் கவர்ச்சிகரமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.