Budh Asta Effects: தற்போது, வக்ர நிலையில் இருக்கும் புதன் ஏப்ரல் 4 அன்று அஸ்தமனம் ஆகிறது. புதனின் அஸ்தமனத்தினால் 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நெருக்கடிகள் அதிகரிக்கும். எனவே, இவர்கள் புதன் உதயமாகும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கிரகங்களின் ராசி மாற்றத்தைத் தவிர, கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மற்றும் அவற்றின் உதயம் மற்றும் அஸ்தமனம் ஆகியவையும் முக்கியமான நிகழ்வுகளாகும். ஜோதிடத்தில், ஒரு கிரகத்தின் அஸ்தமனம் அதன் சக்தி குறைப்பதாக கூறப்படுகிறது.
புதன் அஸ்தமனம்: அறிவாற்றல், புத்திசாலித்தனம், வணிகம் மற்றும் பேச்சு ஆகியவற்றின் காரணியான புதன், ஏப்ரல் 4ம் தேதி காலை 10:36 மணிக்கு மேஷ ராசியில் அஸ்தமித்து, மே 1 ஆம் தேதி அதிகாலை 4:38 மணிக்கு உதயமாகும். புதன் அஸ்தமனம் முதல் புதன் உதயம் வரை உள்ள 26 நாட்கள் 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகளை உண்டாக்கும்.
மேஷம்: மேஷ ராசியில் புதன் அஸ்தமனம் ஆவதால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் பிரச்சனைகள் ஏற்படலாம். தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுப்பது நல்லதல்ல. இந்த காலகட்டத்தில், புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் கவனமாக இருப்பது நல்லது.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். மேலும், மன அழுத்தம் கூடும். வாழ்க்கையில் பல விதத்தில் சிக்கல் ஏற்படும். எதிர்மறை எண்ணங்கள் உங்களை ஆதிக்கம் செலுத்தலாம். தன்னம்பிக்கை குறைவாக இருக்கும். இக்கட்டான நிலைக்கு ஆளாகி, பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டே இருப்பீர்கள்.
கன்னி: வேலை சம்பந்தமாக சவாலான சூழ்நிலைகள் ஏற்படலாம். கவனக்குறைவு அதிகம் இருக்கும். நினைவாற்றல் குறைவதை நீங்கள் உணரலாம். எதிர்மறை எண்ணங்கள் அடிக்கடி மனதில் தோன்றும். வேலையில் சில தடைகளை சந்திக்க நேரிடலாம். மன உறுதியை இழக்காமல் இருப்பது நல்லது.
விருச்சிகம்: அலுவலகத்தில் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகளைத் தள்ளிப் போடுவது நல்லது. உங்களை சர்ச்சையில் சிக்க வைக்கும் விஷயங்களை தவிர்ப்பது நல்லது. வேலையில் அழுத்தம் இருக்கும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.
தனுசு: தன்னம்பிக்கை குறைவாக இருக்கலாம். மிகவும் சோர்வாக உணரலாம். இதனால் வேலையை முடிப்பதில் சிக்கல் ஏற்படலாம். அலுவலகத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நீங்கள் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடலாம். சவால்களை புத்திசாலித்தனமாக தீர்ப்பது நல்லது. மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சிக்கவும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.