BSNL 5G Service: பிஎஸ்என்எல் 5ஜி சோதனை... விரைவில் சேவையை பெற உள்ள சில நகரங்கள்..!

BSNL 5G Service: தனியார் தொடை தொடர்பு நிறுவனங்களின் கட்டணங்கள் உயத்தியுள்ளதால், பலர் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறி வருகின்றனர். தினம் தினம் அதிக அளவிலான மக்கள் மிகவும் மலிவான ரீசார்ஜ் பிளான்களை வழங்கும் பிஎஸ்என்எல் சிம்மிற்கு போர்ட் செய்து வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல்  5ஜி சந்தையில் புதிய போட்டியாளராக பிஎஸ்என்எல் நிறுவனம்களமிறங்க தயாராகிவிட்ட நிலையில், 4ஜி மற்றும் 5ஜி சேவையின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1 /8

பிஎஸ்என்எல் 5ஜி சோதனை: தற்போது பிஎஸ்என்எல் 5ஜி  சேவை திட்டம் சோதனை கட்டத்தில் உள்ள நிலையில், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பிஎஸ்என்எல 5ஜி நெட்வொர்க்கை பயன்படுத்தி வீடியோகால் சேவையை முதல் முறையாகப் பரிசோதித்துப் பார்த்தது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 /8

ஒரு லட்சம் டவர்கள் அமைக்க திட்டம்: வரும் அக்டோபர் இறுதிக்குள் 80,000 டவர்களும், 2025  மார்ச் மாதத்துக்குள் சுமார் 21,000 டவர்களும் நிறுவப்படும் என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். இதன் மூலம் 2025 மார்ச் மாதம் ஒரு லட்சம் டவர்கள் மூலம் 4ஜி நெட்வொர்க் வசதி வழங்கப்படும்.

3 /8

பெருநகரங்களில் 5G சேவை: BSNL நிறுவனம் தனது 5G சேவைகளை சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா  போன்ற முக்கிய பெருநகரங்களில் விரைந்து தொடங்க திட்டமிட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

4 /8

BSNL 5G சேவை: டெல்லி கன்னாட் பிளேஸ், ஹைதராபாத் ஐஐடி,  தில்லி  JNU வளாகம், ஐஐடி டெல்லி , குருகிராமில் உள்ள குறிப்பிட்ட இடங்கள், பெங்களூரு அரசு அலுவலகம், ஆகிய இடங்கள் முதலில் 5கி சேவை தொடங்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

5 /8

பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை: மேலும் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில்  பொது துறை நிறுவனமாக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சுமார் ரூ.82,000 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

6 /8

தமிழ்நாட்டில்  சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 19 கிராமங்களுக்கு 4ஜி நெட்வொர்க் சேவையை வழங்கியது பிஎஸ்என்எல் நிறுவனம். விரைவில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 4ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என பிஎஸ் என் எல் கூறியுள்ளது. வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைய ச் செய்துள்ளது.

7 /8

தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களின் கட்டணங்களை அதிகரித்த நிலையில் தற்போது, அதிருப்தி அடைந்துள்ள வாடிக்கையாளர்கள் பலரின் பார்வையும் பிஎஸ்என்எல் பக்கம் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

8 /8

BSNL 5G சேவை:  BSNL தனது 5G சேவைகளை தொடங்க டாடா நிறுவனம் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி, தனியார் நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க சவாலாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.