Bigg Boss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் முதல் பரிசு மற்றும் 2ம் பரிசு யாருக்கு கிடைத்தது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடரை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். ஆரம்பத்தில் பேச தடுமாறினாலும், போக போக மக்களுக்கு பிடித்துவிட்டது. பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விரும்பி பார்த்து வந்தனர்.
பரபரப்பாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேடை பேச்சாளரான முத்துக்குமரன் பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய கருத்துக்களை ஆணித்தனமாக பேசி வந்தார். இது பலருக்கும் பிடித்தது. 50 நாட்களை கடந்த பொழுதே இவர் தான் வின்னர் என்று பலரும் தீர்மானித்து விட்டனர்.
பல வாரங்கள் நாமினேஷனில் இருந்தாலும் மக்கள் ஒட்டு போட்டு அவரை வீட்டில் இருக்க வைத்தனர். தற்போது அதிக வாக்குகளுடன் வெற்றி பெறவும் செய்துள்ளனர்.
சவுந்தர்யா 2வது இடத்தையும், விஜே விஷால் மூன்றாவது இடத்தையும், ரயன் 4வது இடத்தையும், பவித்ரா ஜனனி 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்த முத்துகுமரனுக்கு சம்பளமாக 10 லட்சமும், கோப்பையுடன் 41 லட்சமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.