ஆர்சிபிக்கு மேலும் ஒரு அடி... முக்கிய வீரர் விலகல் - என்ன செய்யப்போகிறார் டூ பிளெசிஸ்?

RCB Mawell Injury: ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து முழு விவரங்களையும் இங்கே காணலாம். 

IPL 2024: ஆர்சிபி அணியின் மிடில் ஆர்டரில் முக்கிய வீரராக இருக்கிறார் மேக்ஸ்வெல். அவர் பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் நல்ல பங்களிப்பை அளிக்கக்கூடியவர்.

 

1 /7

நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்கி இருபது நாள்களாகும் நிலையில், 10 அணிகளும் குறைந்தது 5 போட்டிகளை விளையாடிவிட்டன. அதில் ஆர்சிபி அணி 6 போட்டிகளை விளையாடிவிட்டது.  

2 /7

ஆர்சிபி அணி 6 போட்டிகளில் 1இல் மட்டுமே பஞ்சாப் அணிக்கு எதிராக பெங்களூரில் வென்றது. மீதம் உள்ள 5 போட்டிகளிலும் தோல்வியடைந்தது. லக்னோ - டெல்லி அணிக்கு இடையே தற்போது போட்டி நடைபெற்று வரும் சூழலில் ஆர்சிபி 9வது இடத்தில் உள்ளது. டெல்லி வென்றால் ஆர்சிபி 10வது இடத்திற்கு தள்ளப்படும்.   

3 /7

ஆர்சிபி அணியின் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அந்த அணியில் உலகத்தர பந்துவீச்சாளர்கள் இல்லை. ஹோம் அட்வான்டேஜ் அவர்களுக்கு சுத்தமாக எடுபடவில்லை. பேட்டிங்கிலும் சொதப்பல் நடைபெறுவதால் வெற்றிக்கனி கிடைக்கவில்லை. பிளெயிங் காம்பினேஷனை தேர்வு செய்வதிலும் பெரிய குழப்பம் நீடிக்கிறது.   

4 /7

இந்நிலையில், அந்த அணியின் முக்கிய வெளிநாட்டு வீரர் மேக்ஸ்வெலுக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் ஏப். 15ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. இது அந்த அணியின் மிடில் ஆர்டரிலும், பேக்அப் பந்துவீச்சிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். 

5 /7

இருப்பினும், மேக்ஸ்வெல் நடப்பு தொடரில் 6 போட்டிகளில் விளையாடி வெறும் 32 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார். 6 போட்டிகளில் மூன்று முறை டக்அவுட்டாகி உள்ளார். மேக்ஸ்வெல் பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.   

6 /7

கடந்த போட்டியில் கேம்ரூன் கிரீன் வெளியேற்றப்பட்டு வில் ஜாக்ஸ் களமிறக்கப்பட்ட நிலையில், அடுத்த போட்டியில் மேக்ஸ்வெலுக்கு பதில் கிரீன் உள்ள வருவார் என கூறப்படுகிறது. ஆனால், சுழற்பந்துவீச்சில் ஆர்சிபி ஏற்கெனவே பலவீனமாக உள்ளது. அது இன்னும் மோசமாகும்.   

7 /7

சின்னசாமி மைதானத்தில் இந்தாண்டு மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது. வில் ஜாக்ஸ் வந்திருப்பதால் அவர் சுழற்பந்துவீச்சை ஓரிரு ஓவர்கள் வீசலாம். இதை பயன்படுத்தி பெர்குசனை அணியில் எடுப்பார்கள் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு கெட்டது மூலம் அந்த அணிக்கு பெரும் திருப்பம் நடக்கலாம்.