மங்களம் தரும் மகா சிவராத்திரி.. இந்த ராசிகளுக்கு பண வரவு, கோடீஸ்வர யோகம்

Mahashivratri 2024 Lucky Zodiac Signs : மகாசிவராத்திரி வரும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த அற்புத நாளில் கிரகங்களின் அமைப்பால் உருவாக்கும் மங்கள யோகம் சில ராசியினருக்கு அற்புத பலன்களைத் தரும்.

மகா சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு இரு நாட்களுக்கு முன் வரக்கூடிய சதுர்த்தசி திதியில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி விரத தினம் கோலாகலமாக கொண்டாடப்படும். இதனால் இந்த சிவராத்திரியில் எந்த ராசிகள் சிவனுக்கு பிடித்தமான ராசிகளாக இருப்பார்கள் என்று பார்ப்போம்.

1 /6

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மகாசிவராத்திரி சிறப்பாக இருக்கும். பணியில் இருந்து தடைகள் நீங்கும். முன்னேற்றம் அடைவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். குழந்தைகளுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.  

2 /6

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மகாசிவராத்திரி அற்புதமாக இருக்கும். திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படக்கூடும்.   

3 /6

துலாம் ராசிக்காரர்களின் நிதி நிலை மேம்படும். சிக்கிய பணத்தை திரும்பிப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் நிறைவடையும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.  

4 /6

மகர ராசிக்காரர்களுக்கு மகாசிவராத்திரி லாபகரமாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வேலையில் ப்ரமோஷன் கடிதம் கிடைக்கலாம். பொருளாதார நிலை மேம்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.  

5 /6

கும்ப ராசிக்காரர்களுக்கு மகாசிவராத்திரியால் அமைதி நிலவும். வாகனம் அல்லது சொத்து போனவற்றை வாங்கலாம். நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

6 /6

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.