ஐபிஎல் 2025 மெகா ஏலம்... விதிகள் குறித்து Ex சிஎஸ்கே வீரர்கள் கொடுத்த அட்வைஸ் - என்னென்ன?

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு முன்னாள் வீரர்கள் ஐபிஎல் நிர்வாக குழுவுக்கு தங்களின் பரிந்துரையை தெரிவித்துள்ளனர். அவற்றை இங்கு விரிவாக காணலாம். 

  • Sep 17, 2024, 22:16 PM IST

ஐபிஎல் 2025 மெகா ஏலம் குறித்து எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எக்கச்சக்கமாக இருக்கிறது.

1 /8

ஐபிஎல் 2025 மெகா ஏலம் குறித்த விதிகள் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  

2 /8

ஒவ்வொரு அணிக்கும் 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளவும், 2 RTM கார்டுகளை வழங்கவும் ஐபிஎல் நிர்வாகக் குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.   

3 /8

ஆனால், தற்போது 5 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு, 1 RTM வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவலுக்கு அனைவரும் காத்திருக்கின்றனர்.   

4 /8

அந்த வகையில், ஐபிஎல் மெகா ஏலம் விதிகள் குறித்து பல வீரர்களுக்கு பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. எத்தனை வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்கவைக்கலாம் என பலரும் தங்களின் கணிப்புகளை தெரிவிக்கின்றனர்.   

5 /8

RTM கார்டுகள் வீரர்களுக்கு ஏற்ற தொகையை கிடைக்கவிடாமல் தடுக்கும் முறை என அஸ்வின் விமர்சித்திருந்தார். அதேநேரத்தில், சிஎஸ்கேவை (CSK) சேர்ந்த முன்னாள் வீரர்கள் அம்பதி ராயுடு மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரும் ஐபிஎல் மெகா ஏலத்தின் விதிகள் குறித்து தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.  .

6 /8

இதுகுறித்து கருத்து தெரிவித்த அம்பதி ராயுடு (Ambati Rayudu),"தனிப்பட்ட முறையில், வீரர்களை தக்கவைக்கும் எண்ணிக்கையை இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் ஒரு அணியானது ஒரு வீரர் மீது நிறைய முதலீடு செய்கிறது. அணியின் முக்கிய அம்சம்தான் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியையும் தனித்துவமாக்குகிறது. எனவே அந்த அணியின் கலாச்சாரம் நீண்ட காலம் தாக்குப்பிடிக்கும்" என்றார்.  

7 /8

மேலும், "இது வெற்றிகரமான முடிவாக பல வாய்ப்புகள் இருக்கின்றன. வீரர்களை தக்கவைக்கும் முறை இருக்க வேண்டும் மற்றும் நிறைய தக்கவைப்புகள் இருக்க வேண்டும். அது ஒன்று அல்லது இரண்டாக இருக்க முடியாது. அனைத்து முக்கிய வீரர்களையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.   

8 /8

இதைத் தொடர்ந்து பேசிய சுரேஷ் ரெய்னா (Suresh Raina),"ராயுடுவுடன் நான் 100 சதவீதம் உடன்படுகிறேன். மெகா ஏலம் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒருமுறை இருக்க வேண்டும். ஐபிஎல் நிர்வாகக் குழு விளையாட்டுக்குச் சிறந்ததை செய்யும்" என்றார்