மக்களே உஷார்: ஆயுள் காப்பீடு எடுக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்

கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, பெரும்பாலானோர் எதிர்காலத்தைப் பாதுகாப்பானதாக்க இன்சூரன்ஸ் பாலிசியின் உதவியை நாடுகிறார்கள். எனினும் ஆயுள் காப்பீடு எடுக்கும்போது பல வித விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும். ஒரு சிறிய தவறு இருந்தால் கூட உங்கள் காப்பீட்டுக் கொள்கை நிராகரிக்கப்படலாம். பாலிசி எடுப்பதற்கு முன், நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல வகையான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் ஆவணங்களை வழங்குகிறது. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சரியாகப் படிப்பது மிகவும் முக்கியமாகும். பாலிசி எடுக்கும்போது இந்த விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

1 /4

பாலிசி எடுக்கும்போது பொதுவாக மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவென்றால், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களைப் பற்றி காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவிக்காமல் இருப்பதுதான். நிறுவனம் இந்த நோய்களைப் பற்றி பின்னர் அறிந்தால், அத்தகைய சூழ்நிலையில், தகவலை மறைத்ததற்கான, உங்கள் பாலிசி கோரிக்கையை நிறுவனம் நிராகரிக்கக்கூடும். 

2 /4

ஒவ்வொரு பாலிசிக்கும் க்ளெயிம் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் உள்ளது. பல நேரங்களில் மக்கள் காலக்கெடு முடிந்த பிறகு க்ளைம் தாக்கல் செய்கிறார்கள். காலக்கெடு முடிந்த பின்னர் கிளெயிம் தாக்கல் செய்தால், பாலிசிதாரரின் கோரிக்கையை நிறுவனம் நிராகரிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், பாலிசி எடுக்கும் நேரத்தில், செயலாக்க காலம் பற்றிய தகவலை கண்டிப்பாக தெளிவுபடுத்திக்கொள்ளவும். 

3 /4

பல சமயங்களில் பலர் பாலிசி எடுத்த பிறகு சரியான நேரத்தில் பிரீமியத்தை செலுத்துவதில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் பிரீமியம் செலுத்துவதில் சில சலுகைகளை வழங்குகின்றன. ஆனால், அந்த சலுகை வரம்பு காலாவதியான பிறகு, அந்த பாலிசியின் கிளெயிமை பெற முடியாது. 

4 /4

பாலிசியை எடுக்கும் போது, ​​உங்கள் நாமினியை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் திருமணத்திற்குப் பிறகு, மனைவி, கணவர் மற்றும் குழந்தைகள் பாலிசியில் நாமினி ஆக்க விரும்பினால், அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு உங்கள் நாமினியைப் புதுப்பிக்க வேண்டும். இல்லையெனில், பாலிசியை பின்னர் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.