காலையில் இதனை குடித்தால் போதும்! உடல் எடை எளிதாக குறையும்!

இப்போது பலரும் உடல் எடை குறைப்பில் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்றவற்றோடு தினமும் பலவிதமான டீடாக்ஸ் ட்ரிங்குகளை பருக தொடங்கிவிட்டனர்.

 

1 /5

சில துண்டுகள் வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சைபழ துண்டுகளை தண்ணீரில் போட்டுவைத்து அதில் சிறிதளவு உப்பு மற்றும் புதினா இலைகளை சேர்த்து குடித்துவர உடல் எடை குறையும்.  

2 /5

1 கேரட் மற்றும் 1 ஆரஞ்சு பழத்துடன் சில கொத்துமல்லி இலைகள் மற்றும் தேன் சேர்த்து அரைத்தெடுத்து அந்த சாறில் சிறிது ஐஸ்கட்டிகளை சேர்த்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.  

3 /5

2 பீட்ரூட்டை தண்ணீர் சேர்த்து, அதில் சில புதினா இலைகளை சேர்த்து அரைத்து சாறெடுத்து அதில் சிறிதளவு சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குடித்து வர நல்ல பலனை பெறலாம்.  

4 /5

2 கப் மோர், 1 ஸ்பூன் வறுத்த சீரக தூள், உப்பு, கொத்துமல்லி இலைகள் மற்றும் சில நறுக்கிய கேரட் துண்டுகள் சேர்த்து அரைத்து பருகி வர நல்ல பலன் கிடைக்கும்.  

5 /5

1 கப் ஸ்ட்ராபெரிகளுடன், 1 ஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் மற்றும் சில புதினா இலைகள், 2 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து சாறெடுத்து குடித்து வர உடலுக்கு நன்மை கிடைக்கும்.