காலையில் எழுந்ததும் தேநீர் அல்லது காபி குடிப்பதை விட அறை வெப்பநிலையிலுள்ள தண்ணீரை குடிப்பது உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை தரும்.
பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்ததும் சூடான தேநீர் அல்லது காபி குடிப்பதை விரும்புவார்கள் ஆனால் வெறும் வயிற்றில் இவற்றை குடிப்பது உடல் நலத்திற்கு நல்லதல்ல.
தேநீர் மற்றும் காபியின் பிஹெச் அளவு 4 முதல் 5 இருக்கிறது, இதனை வெறும் வயிற்றில் குடிப்பதால் உங்களது வயிற்றில் அமிலத்தன்மையை தோற்றுவிக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது சிறந்தது, இதனால் அமிலத்தன்மை, அல்சர், தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படாது.
காலையில் தண்ணீர் குடிப்பதால் மலசிக்கல் போன்ற பிரச்சனைகள் குணமாவதுடன், உடல் நீரேற்றமாகவும் இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் காபி குடித்தால் நீரிழப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.