‘லியோ’ படத்தில் சஞ்சய் தத்திற்கு தமிழ் பேச சொல்லிக்கொடுத்தது யார் தெரியுமா?

சமீபத்தில் வெளியான ‘லியோ’ படத்தில் சஞ்சய் தத்திற்கு தமிழ் பேச சொல்லிக்கொடுத்தவர் யார் தெரியுமா?

1 /7

லியோ படத்தில் இந்தி நடிகர் சஞ்சய் தத், ஆண்டனி தாஸ் என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு இப்படத்தில் தமிழ் பேச சொல்லிக்கொடுத்தது யார் தெரியுமா? 

2 /7

மேடை நாடக கலைஞரான மாயா, கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியிருந்த விக்ரம் படத்தில் நடித்திருந்தார். 

3 /7

எல்.சி.யுவில் இடம் பெற்றுள்ள லியோ படத்திலும் மாயா இரண்டு காட்சிகளில் தோன்றினார். இப்படத்தில் நடிகர் சஞ்சய் தத்திற்கு தமிழ் டைலாக் பேச சொல்லிக்கொடுத்ததே மாயாதான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

4 /7

ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன்7-ல் முக்கிய போட்டியாளராக பங்கேற்றிருப்பவர், மாயா. மக்களின் ஆதரவை பெற்ற ஹவுஸ் மேட்ஸ்களுள் இவரும் ஒருவர். 

5 /7

மாயா, லியோ படத்தில் சஞ்சய் தத்திற்கு தமிழ் சொல்லிக்கொடுத்திருக்கிறார் என்ற தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர். 

6 /7

இந்த வார நாமினேஷனில் மாயாவும் உள்ளார். இந்த வார கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதும் மாயாதான். 

7 /7

மாயா டாப் 5 இறுதி போட்டியாளர்களுள் ஒருவராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.