பல்வேறு நகரங்களில் குறிப்பிட்ட நாட்களுக்கு வங்கிகள் இந்த மாதம் மூடப்பட்டிருக்கும் என்பதை வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வழக்கமாக மாதந்தோறும் ரிசர்வ் வங்கி (RBI) பல்வேறு நகரங்களில் உள்ள வங்கிகளுக்கான விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிடுகிறது. இந்த நாட்களில், வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளில் பணம் எடுக்கவும், டெபாசிட் செய்யவும் முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Also Read | Prince the Horse: இந்திய ராணுவ மரியாதையை பெற்ற 16 வயது குதிரை
மூன்று பிரிவுகளின் கீழ் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி விடுமுறை அளிக்கிறது. அவை Negotiable Instruments Act சட்டத்தின் கீழ் விடுமுறை, Negotiable Instruments Act மற்றும் நிகழ்நேர மொத்த தீர்வு விடுமுறை, மூன்றாவதாக வங்கிகளின் கணக்குகளை முடிப்பதற்கான விடுமுறை என மூன்று வகைப்படும். Source: PTI
செப்டம்பர் 8, 2021 அன்று, கவுகாத்தியில் ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி விழாவையொட்டி வங்கிகள் மூடப்படும். செப்டம்பர் 9, 2021 அன்று, கேங்டாக்கில் தீஜ் (ஹரித்தாலிகா) விழாவுக்காக வங்கிகள் மூடப்படும். 2021 செப்டம்பர் 10ம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி/சம்வத்சரி (சதுர்த்தி பக்ஷ)/விநாயகர் சதுர்த்தி/வரசித்தி விநாயக விரதம் என்பதற்காக, அகமதாபாத், பெலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜி ஆகிய நாட்களில் வங்கிகள் மூடப்படும். மீண்டும், பனாஜியில் விநாயகர் சதுர்த்தி (2 வது நாள்) காரணமாக செப்டம்பர் 11, 2021 அன்று வங்கிகள் மூடப்படும். Source: PTI
ராஞ்சியில் கர்மா பூஜை காரணமாக 2021 செப்டம்பர் 17 அன்று வங்கிகள் மூடப்படும். மீண்டும், கேங்டாக்கில் இந்திரஜத்ரா பண்டிகைக்காக செப்டம்பர் 20, 2021 அன்று வங்கிகள் மூடப்படும். செப்டம்பர் 21 அன்று, கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் ஸ்ரீ நாராயண குரு சமாதி தினத்தன்று வங்கிகள் மூடப்படும். Source: PTI
மேற்குறிப்பிட்ட விடுமுறைகள் தவிர, செப்டம்பர் 11 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வங்கிகள் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் காரணமாக மூடப்படும். ஞாயிற்றுக்கிழமைகள் காரணமாக செப்டம்பர் 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளிலும் வங்கிகள் மூடப்படும். Source: PTI
விடுமுறை நாட்களிலும் ஆன்லைன் வங்கி சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்பதை கவனத்தில் கொள்ளலாம். வங்கி வாடிக்கையாளர்கள் விடுமுறை நாட்களில் வங்கி கிளைகளில் பணம் எடுக்க மற்றும் டெபாசிட் செய்ய முடியாது. இருப்பினும், இந்த நாட்களில் ஏடிஎம்கள், மொபைல் வங்கி சேவைகளும் கிடைக்கும். Source: PTI