ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் (Anant Ambani - Radhika Merchant Wedding) கலந்துகொண்டதில், அதிகம் கவனம் ஈர்க்காத ஆடைகளை அணிந்துவந்த பிரபலங்கள் சிலரை நெட்டிசன்கள் பட்டியலிட்டிருந்தனர். அவர்களில் சிலரின் ஆடைகள் குறித்து இங்கு காணலாம்.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழா முடிந்து மூன்று நாள்கள் ஆனாலும் இன்னும் அதுகுறித்த பேச்சுகள் மட்டும் ஓயவே இல்லை எனலாம்.
கடந்த ஜூன் 12ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண விழா மும்பை ஜியோ வோல்ர்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் அம்பானி குடும்பத்தார், மெர்ச்சன்ட் குடும்பத்தார், மேத்தா குடும்பத்தார், பிரமல் குடும்பத்தார் மட்டுமின்றி உலகின் முன்னணி நட்சத்திரங்கள், திரை பிரபலங்கள், பாடகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கலந்துகொண்ட பிரபலங்களில் பலரின் ஆடைகளும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக, மணமக்களை தவிர்த்து நிதா அம்பானி (Nita Ambani), இஷா அம்பானி (Isha Ambani), ஸ்லோகா மேத்தா (Shloka Mehta) என அம்பானி குடும்பத்தாரின் ஆடைகளும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தன.
இருப்பினும், மிகவும் பிரபலமான இந்த 4 பேரின் ஆடை தேர்வு குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. பிரம்மாண்ட ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் அவர்களின் ஆடை பெரிதாக யாரையும் கவரவில்லை என தெரிவிக்கின்றனர். அவை குறித்து இங்கு காணலாம்.
ஷர்மின் சேகல்: பாலிவுட் நடிகையான இவர் மிகவும் டல்லான காஸ்ட்யூமில் தோற்றமளித்தார். பேஸ்டல் பிங்க் லெஹாங்காவில் அதிக மினுமினுப்புடன் கூடிய ஆடையை அவர் அணிந்திருந்தார். அந்த டிசைன் மிகவும் பழைய ஸ்டைலில் இருந்தது என்று நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டிருந்தனர்.
ஐஸ்வர்யா ராய்: இவரின் பேஷன் தேர்வுகளை பற்றி குறிப்பிட வேண்டியேதில்லை. கச்சிதமான டிசைன்களோடு ஆடைகளை தேர்வு செய்து அவற்றை நேர்த்தியாக உடுத்துவதில் ஐஸ்வர்யா ராய்க்கு நிகர் அவரேதான். இருந்தாலும், ஆனந்த் - ராதிகா திருமண விழாவில் இவர் எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே ஆடையை அணிந்திருந்தார். பல்வேறு நிறங்களை கொண்ட அந்த ஆடையும், அவரின் பெரிது பெரிதான ஆபரணங்களும் சுமாரான தேர்வாகவே இருந்தது என நெட்டிசன்கள் தங்களின் ஏமாற்றத்தை தெரிவித்தனர்.
எம்எஸ் தோனி: தோனி எப்போதும் எளிய தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்றாலும் பொது இடங்களில் ஆடைகள் தேர்வில் சற்று சிரத்தை எடுத்துக்கொள்வார். இருப்பினும், ஆனந்த் - ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்வில் அது சற்று குறைவானதாகவே இருந்தது எனலாம். தங்க நிறத்தில் குர்தாவும் அதே நிறத்தில் பேண்டும் அணிந்திருந்தது அவ்வளவு ரசிக்கக் கூடியதாக இல்லை என்கின்றனர் நெட்டிசன்கள்.
மைக்கா சிங்: இந்தி பாடகரான இவர் அந்த பிரம்மாண்ட திருமணத்தில் மிக சாதாரண ஆடையையே அணிந்து வந்தார். கருப்பு சட்டை மற்றும் வெள்ளை நிற பேண்ட், சன்கிளாஸ் ஆகியவை மிகவும் பார்மலாக இருந்தது. திருமணத்திற்கு ஏற்றதாக அது அமையவில்லை எனலாம்.