Aadi Velli 2024: கடக ராசியில் சூரியன் பயணிக்கும் மாதத்தை தமிழில் ஆடி மாதம் என்று அழைக்கிறோம். அதேபோல, செல்வத்திற்கும், சுக போகமான வாழ்க்கை, மகிழ்ச்சி ஆகியவற்றிற்குக் உரிய சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த நாள் வெள்ளிக்கிழமை. ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரனும், சந்திரனும் இணைந்து சுபபலன்களைக் கொடுப்பார்கள்.
ஜோதிட சாஸ்திரங்களின்படி சுக்கிரன் மற்றும் சந்திர சேர்க்கை ஏற்படும் போது, பெண் தெய்வத்தின் சக்தி அதிகரித்து காணப்படும். அதனால் தான் ஆடி வெள்ளி அம்பிகைக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது
ஆடிமாதப் பிறப்பு தட்சிணாயின புண்ணிய காலத்தின் முதல் நாள் ஆகும். சூரியன் தனது பயணத்தை தென் திசை நோக்கி தொடங்கும் இந்தக் காலம் தேவர்களின் இரவுப் பொழுது என்று சொல்லப்படுகின்றது.
அதனால் ஆடி மாதம் முதல் காக்கும் கடவும் விஷ்ணுவும் பிற தெய்வங்களும் உறக்க நிலைக்கு சென்று விடும் நிலையில், சிவனும் பார்வதியும் தான் அனைத்து தெய்வங்களின் கடமைகளையும் ஆற்றுகின்றனர். சிவபார்வதி ஸ்வரூபத்தை ஆடி மாதத்தில் வணங்குவது சிறப்பு
ஆடி மாதங்களில் வரும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்தது என்றால், வெள்ளிக்கிழமைகள் அம்மனுக்கு உகந்தவை
ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நாள், ஸ்வர்ணாம்பிகை தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இந்த அன்னை பார்வதி தேவியின் ஸ்வரூபமாகும். ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று அம்மனை வழிபடுபவர்கள் பார்வதிதேவிக்கு விரதம் வைத்து, பூஜை வழிபாடுகள் செய்வது வழக்கம்
ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்னை காளிக்கு உரியது. எனவே ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று பார்வதி தேவியை வழிபடுவது ஒருவரின் வாழ்க்கையில் செழிப்பையும் தைரியத்தையும் கொடுக்கும்
ஆடி வெள்ளியின் மூன்றாவது வாரத்தில் வாராகி அம்மனை வழிபட்டால் துன்பங்கள் தொலைந்தோடும், இன்பங்கள் வந்து சேரும்
புனிதமான ஆடி வெள்ளியின் நான்காவது வெள்ளிக்கிழமையில், காமாக்ஷி அம்மனை வணங்கினால், உறவுகளை பாதுகாத்து மனதில் நிம்மதியை வழங்குகிறாள் அன்னை.
ஆடி மாதத்தின் ஐந்தாவது வெள்ளிக்கிழமை லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஐந்தாம் வெள்ளியில் அன்னை லக்ஷ்மியை வழிபட்டால் பண வரத்து அதிகரிக்கும், குடும்பத்தில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்