இன்னும் 2 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம், முழு ராசிபலன் இதோ

Venus Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களது ராசியை மாற்றுகின்றன. இந்த ராசி மாற்றங்கள் கிரகப்பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன.

Venus Transit: பேச்சாற்றல், அறிவுத்திறன், அழகு, வெற்றி, குடும்ப வாழ்க்கை ஆகியவற்றின் காரணி கிரகமாக விளங்கும் சுக்கிரன் பிப்ரவரி 12 அதாவது இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு பெயர்ச்சியாக உள்ளார். சுக்ரனின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் பெயர்ச்சி சிலருக்கு சாதகமான விளைவுகளையும் சிலருக்கு பிரச்சனைகளையும் கொண்டு வரும். 12 ராசிகளிலும் சுக்கிரன் பெயர்ச்சியால் ஏற்பட உள்ள தாக்கங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /13

சுக்ரனின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் வலுவான வெற்றிகளை கொடுக்கும். உங்கள் கடின உழைப்புக்கான முழுமையான பலன் இந்த காலத்தில் கிடைக்கும். வேலை தொடர்பான உங்களது அனைத்து பிரச்சனைகளும் இந்த காலத்தில் முடிவுக்கு வரும்  

2 /13

சுக்ரன் பெயர்ச்சியின் தாக்கத்தால் நீண்ட நாட்களாக நிதி பிரச்சினையால் அவதியில் இருந்தவர்கள் இப்போது நிவாரணம் பெறுவார்கள். நிதிநிலை நன்றாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு உள்ளது. பண வரவு அதிகரிக்கும்

3 /13

உங்கள் வாழ்க்கைத் துணையுடன் புரிதல் அதிகமாகும். உடல் நலனில் சற்று கவனம் தேவை. இந்த காலத்தில் அதிகப்படியான உடல் உழைப்பு இருக்கும் என்பதால் உணவிலும் உறக்கத்திலும் கவனமாக இருப்பது நல்லது.

4 /13

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி அதிகப்படியான மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும். உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியான பொழுதை செலவிடுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு பாராட்டுகள் அதிகமாகும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கடக ராசிக்காரர்களுக்கும் இது லாபகரமான நேரமாக இருக்கும்.

5 /13

இந்த காலத்தில் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சிறிய மனஸ்தாபங்களும் வாக்குவாதங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும். இல்லையென்றால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. யோகாசனம் போன்றவற்றில் ஈடுபடுவது நிவாரணம் அளிக்கும்.

6 /13

சுக்கிர பெயர்ச்சி தாக்கம் காரணமாக நிதிநிலை நன்றாக இருக்கும். பண வரவு அதிகமாகும். குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்

7 /13

இந்த காலகட்டத்தில் சிறு சிறு சஞ்சலங்கள் ஏற்படலாம். எனினும் நிதானமாக யோசித்து முடிவு எடுத்தால் இந்த சஞ்சலங்களால் பெரிய பாதிப்பு ஏற்படாது. உடல் நலனில் கவனம் தேவை.

8 /13

வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். உங்களுக்குள் அன்பும் புரிதலும் அதிகமாகும். பணியிடத்திலும் வணிகத்திலும் முடிவுகளை எடுக்கும் போது எதார்த்தமாக சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. பணியிடத்தில் வேலை பளி அதிகமாகும்.

9 /13

வணிகத்தில் ஈடுபட்டுள்ள தனுசு ராசிக்காரர்கள் சற்று நிதானமாக செயல்பட வேண்டிய நேரம் இது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்னர் பலமுறை யோசித்து நிபுணர்களிடம் கேட்டு கலந்தாலோசித்து பின்னர் முடிவெடுக்கவும்.

10 /13

உங்கள் தொழிலில் புதிய எண்ணங்களை புகுத்தவும் புதிய முயற்சிகளை செய்து பார்க்கவும் இந்த நேரம் ஏற்ற நேரமாக இருக்கும். இப்போது நீங்கள் முதலீடுகளை செய்யலாம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் ஏற்படும்.

11 /13

சுக்கிரன் பெயர்ச்சியின் காரணமாக உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் முழுமையான ஆதரவும் நம்பிக்கையும் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

12 /13

சுக்கிரன் பெயர்ச்சி காரணத்தால் உங்களுக்கு குழப்பமான சூழ்நிலை இருக்கலாம். எனினும் யோகாசனம் போன்றவற்றால் தெளிவு கிடைக்கும் உழைப்புக்கான முழுமையான பலன் இந்த காலத்தில் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபிடித்து இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும் 

13 /13

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.