அடுத்தடுத்து பட்டியலை அடுக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்.. இதோ லிஸ்ட்

கோலிவுட்டில் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக மாஸ் காட்டி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது நடிகை சிவகார்த்திகேயன் அடுத்தெடுத்து நடிக்கப்  போகும் பங்களின் விவரத்தை இங்கே காண்போம்.

நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan), ஒரு பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். தனது பேச்சால் மக்களை பயங்கரமாக கவர்ந்த அவர், அடுத்து தனுஷ் உடன் 3 படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார். இதையடுத்து இவருக்கு மெரினா படத்தில் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், 10 ஆண்டுகளில் மளமளவென வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். 

1 /5

அயலான்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அயலான். குழந்தைகளை கவர்ந்த இப்படம் பேமிலி ஆடியன்ஸ் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்தது. கிட்டத்தட்ட ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது வரும் 9 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. 

2 /5

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ’எஸ்கே 21’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.  

3 /5

எஸ்கே23: ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் இணைகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இது நடிகர் சிவகார்த்திகேயனின் 23வது படமாக உருவாகிறது. 

4 /5

எஸ்கே24: நடிகர் சிவகார்த்திகேயனின் 24வது படம் குறித்து தகவல் வலம் வருகிறது. அதாவது அவரின் 24வது படத்தை சிபி சக்ரவர்த்தி (Cibi Chakaravarthi) இயக்க பேஷன் ஸ்டுடியோஸ் (Passion Studios) தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

5 /5

எஸ்கே25: நடிகர் சிவகர்த்திகேயனுடன் இயக்குநர் வெங்கட் பிரபு இணைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. இது நடிகர் சிவகர்த்திகேயனின் 25வது படமாகும்.