பஞ்ச மஹா யோகம்: 4 ராசிகளின் தலைவிதி மாறும், நினைத்தது நடக்கும்

Planet Conjunctions: ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜோதிடக் கணக்கீடுகளின் படி கிரகங்களின் சேர்க்கை சிலருக்கு சுபமாகவும் சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். இம்முறை பிப்ரவரி 19ம் தேதி முதல் ஷஷ், ஜ்யோஷ்டா, ஷங்கம், சர்வார்த்தசித்தி, கேதாரம் உள்ளிட்ட 5 யோகங்கள் உருவாகியுள்ளன. இந்த 5 பெரிய யோகங்களின் இந்த அரிய நிகழ்வு 70 ஆண்டுகளுக்குப் பிறகு காணப்படுகிறது. 

1 /5

கிரக மாற்றங்களின் பலனாக 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படவுள்ளன. இவர்கள் வீட்டில் பணமும், செல்வச்செழிப்பும் நிரம்பி வழியும். அந்த 4 அதிர்ஷ்டசாலி ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /5

மிதுன ராசிக்காரர்களுக்கு பஞ்ச மகாயோகம் மிகவும் சாதகமாக அமையும். இந்த நேரத்தில், வேலையில் வெற்றி இருக்கும், அதே நேரத்தில் வியாபாரமும் அதிகரிக்கும். மிதுன ராசிக்காரர்கள் பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேல் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். 

3 /5

உத்தியோகத்தில் இருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்கள் பணியில் வெற்றி பெறலாம். வீட்டிற்கு வாகனம் அல்லது புதிய சொத்து வாங்கும் யோகம் இப்போது உருவாகும். 

4 /5

ஐந்து மகா யோகங்களின் இந்த அரிய சேர்க்கை கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமாக இருக்கப்போகிறது. பிறருடன் சேர்ந்து செய்யும் தொழிலில் லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து நல்ல லாபம் கிடைக்கும். 

5 /5

சிம்ம ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் சூடுபிடிக்கும். இந்த காலத்தில் செய்யப்படும் முதலீடுகள் நல்ல லாபம் கொடுக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தடைபட்ட உங்களின் வேலைகள் அனைத்தும் இப்போது முடிவடையும்.