ஆடி இ-ட்ரான் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் மின்சார காராக இருக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் ஈக்யூசி மற்றும் ஜாகுவார் ஐ-பேஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக ஆடி இ-ட்ரான் உருவாக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஈக்யூசி கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ஆடி இந்தியா புதன்கிழமை (ஜூன் 23) நிறுவனம் இ-ட்ரான் எஸ்யூவியை, இந்தியாவில் அறிமுகம் செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்தது. ஜெர்மன் வாகன உற்பத்தியாளரின் அடுத்த பெரிய வெளியீடு 22 ஜூலை 2021 அன்று நடைபெறும்.
Also Read | History Today: June 24ம் தேதியன்று வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள்
ஆடி இ-ட்ரான் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் மின்சார காராக இருக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் ஈக்யூசி மற்றும் ஜாகுவார் ஐ-பேஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக ஆடி இ-ட்ரான் உருவாக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஈக்யூசி கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆடி இ-ட்ரான் காரில் 71.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 0-100 கிமீ வேகத்தை வெறும் 6.8 வினாடிகளில் கடக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த காரின் அதிகபட்ச வேகம் 190 கி.மீ.
அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில், உயர்தர நவீன அம்சங்களுடன் வருகிறது ஆடி இ-ட்ரான் ஆடம்பர எஸ்யூவி. இரண்டு பெரிய தொடுதிரை அலகுகள், சுற்றுப்புற விளக்குகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றால் அருமையான அனுபவத்தைக் கொடுக்கும் இந்த மின்சார கார்.
ஆடி தேர்ந்தெடுக்கப்பட்ட ஷோரூம்களில் மட்டுமே ஈ-ட்ரான் மாடல்களை அறிமுகம் செய்கிறது. இந்த ஆடம்பர சொகுசுக் காருக்கான முன்பதிவு தேதியை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.
இந்தியாவில் இ-ட்ரான் விலையை ஆடி இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், இந்த கார் ரூ.1.3 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த கார் மூன்று வண்ணங்களில் கிடைக்கும். அந்த வண்ணங்களை வெண்மை, பழுப்பு, கருப்பு என்று சாதாரணமாக சொல்லிவிட முடியாது. Chronos grey, Glacier white, Mythos black என்று சிறப்பாக குறிப்பிடலாம்.