Jupiter Transit: குரு பார்வை இருந்தால் கோடி நன்மை! அதற்கு இந்த பரிகாரங்கள் உதவும்...

Remedies For Guru Peyarchi:  நவகிரகங்களில் மங்களகரமானவராக கருதப்படும் குருவின் பார்வை இருந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும், மலை போல வரும் பிரச்சனைகள், மடுவாய் மறையும். 

அதிலும், குரு பெயர்ச்சி என்பது மிகவும் முக்கியமானது. எந்தவொரு பெயர்ச்சியாலும் நன்மைகள் இருப்பதைப் போலவே தீமைகளும் இருக்கும்...   அதேபோல, குரு பகவான், 13 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொன்றுக்கு பெயர்சியடைகிறார். இந்தப் பெயர்ச்சியால் நன்மைகள் மட்டுமே நடக்க வேண்டுமா? அதற்கு இந்த பரிகாரங்கள் உதவும்.  

1 /14

குரு பகவான், 13 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொன்றுக்கு பெயர்சியடைகிறார். இந்த ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று குரு ரிஷப ராசிக்கு மாறுகிறார் இந்தப் பெயர்ச்சியால் நன்மைகள் மட்டுமே நடக்க வேண்டுமா? அதற்கு இந்த பரிகாரங்கள் உதவும்.  

2 /14

சோம்பலைக் கைவிட்டு, கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். பணியிடத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். பரிகாரம்: குருவை சாந்திப்படுத்த வியாழக்கிழமை நாளன்று, மஞ்சள் நிறத்தில் இருக்கும் புஷ்பராகம் பதித்த மோதிரத்தை விரலில் அணியவும்.  

3 /14

செலவுகளைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்திலும் கவனம் அவசியம்,.   பரிகாரம்: மஞ்சள் நிறத்தில் உள்ள ஏதாவது பொருள் ஒன்றை எப்போதும் உங்களிடம் வைத்திருக்கவும்  

4 /14

எண்ணங்களே செயல்களுக்கு அடிப்படை என்பதால், சிந்திக்கும்போது, ஆக்கப்பூர்வமாகவும், நேர்மறையாக மட்டுமே சிந்திக்கவும். ஆரோக்கியமும் முக்கியமானது. பரிகாரம்: காலையில் குளித்த பின், சிவ வழிபாடு செய்த பிறகு உணவு அருந்தவும்

5 /14

பரிகாரம்: குரு பகவானின் மந்திரங்களை உச்சரிக்கவும். சமஸ்கிருத மந்திரங்கள் தான் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஓம் குருவே போற்றி என்பது போன்ற மந்திரங்களை தினமும் 108 முறை உச்சரிக்கவும்.

6 /14

வேலையில் நல்ல சாதனைகளை தரும் குருப் பெயர்ச்சி, ஆரோக்கியத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும்  என்றால், வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்கி அவருக்கு கொண்டைக்கடலை மாலை போட்டு பிரார்த்திக்கவும்.  

7 /14

வாழ்க்கையில் அனைத்து நலன்களையும் பெற வியாழக்கிழமை நாட்களில் மாட்டுக்கு அகத்திக்கீரை உணவளிக்கவும். கால்நடைகளுக்கு உணவு கொடுக்கவும்

8 /14

பரிகாரம்: வியாழக்கிழமை நாட்களில் விஷ்ணு சஹஸ்த்ரநாம ஸ்தோத்திரத்தை தவறாமல் பாராயணம் செய்ய வேண்டும், அதேபோல, பெருமாளை தரிசனம் செய்வதும் நல்லது

9 /14

மாணவர்கள் மற்றும் படிப்பவர்களுக்கு உதவி செய்வது உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கொடுக்கும்

10 /14

ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் குரு பெயர்ச்சியின் தாக்கத்தைத் தணிக்க, வியாழக்கிழமை நாட்களில் ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி விரதம் இருக்கவும்.

11 /14

வியாழக்கிழமைகளில் கோவிலுக்கு சென்று கொண்டைக்கடலை மாலை சார்த்தி, குரு பகவானுக்கு அர்ச்சனை செய்யவும்

12 /14

பிரஹஸ்பதி தாரா தூபம் எனப்படும் நிலையில் குரு பகவான் இருப்பதால், குரு வழிபாடு நல்லது. ஆசிரியர்களுக்கு மரியாதை செய்யுங்கள்

13 /14

வியாழனன்று விரதம் இருப்பது உங்கள் மனதில் நிம்மதியைக் கொண்டு வரும். கடுமையான வார்த்தைகளைப் பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். உணவு தானம் என்பதை தலைமுறைகளைக் காக்கும்

14 /14

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது