புகைப்படங்கள்: தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!

அசாம் மாநில அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தலை அடுத்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வாத்ரா இரண்டு நாள் பயணமாக அம்மாநிலத்திற்கு சென்றுள்ளார்.

அசாம் (Assam) மாநில பிஸ்வநாத் பகுதியில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்களுடன் சேர்ந்து தேயிலை பறித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி (Priyanka Gandhi Vadra)  

1 /5

அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அம்மாநில மக்களுடன் உரையாடினார். 

2 /5

அசாம் மாநில பிஸ்வநாத் பகுதியில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்களுடன் சேர்ந்து தேயிலை பறித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி. 

3 /5

அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரிடமும் சாதாரணமாக அருந்தும் பேசினார். தேநீரையும் பருகினார். இளைஞர்களுடன் சேர்ந்து ஜுமூர் நடனத்தில் பங்கேற்றார். குவஹாத்தியில் உள்ள காமக்யா தேவி கோயிலுக்கு விஜயம் செய்தார். 

4 /5

தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்களுடன் சேர்ந்து மகிழ்ந்த புகைப்படக் காட்சிகளை தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் பகிர்ந்துக் கொண்டார். 

5 /5

அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தல் மார்ச் 27 முதல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத்தில் 47 இடங்களிலும், 2 வது கட்டத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி 39 இடங்களிலும், இறுதி கட்டம் ஏப்ரல் 6 ஆம் தேதி 40 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தல் முடிவுகள் மே 2 ஆம் தேதி அறிவிக்கப்படும்.