அசானி புயல் முன்னெச்சரிக்கை ஆந்திராவில் தீவிரம்

அசானி புயலையொட்டி ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அசானி புயல், ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையையொட்டி கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

1 /5

இதனால், அந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விசாகப்பட்டன விமான நிலையத்தில் விமான சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. துறைமுகப் பணிகளும் தற்காலிகமாக முடங்கியுள்ளது.  

2 /5

ஒடிசா மாநிலம் சர்தர்ப்பூரில் அசானி புயலால் பயங்கர கடல் சீற்றத்துடன் கனமழை பெய்து வருகிறது. இதில் மீனவ படகு ஒன்று சிக்கி கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் நீந்தி உயிர்பிழைத்தனர்.  

3 /5

தீவிர புயலாக ஆந்திராவை நெருங்கியுள்ள அசானி புயல், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

4 /5

மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் இன்று முதல் நாளை மறுநாள் வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.   

5 /5

அசானி புயல் காரணமாக தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.