அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படம் எப்போது ரிலீஸ்? லேட்டஸ்ட் அப்டேட்!

அருண் விஜய்யை வைத்து இயக்குனர் பாலா இயக்கி வரும் 'வணங்கான்' படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

 

1 /5

இயக்குனர் பாலா, 2டி என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் சூர்யாவை வைத்து 'வணங்கான்' படத்தை இயக்க திட்டமிட்டிருந்த நிலையில் சில நாட்களுக்கு பிறகு சூர்யா இப்படத்திலிருந்து விலகினார்.  

2 /5

'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பின்னர் அருண் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டார், இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷ்னி பிரகாஷ் நடிக்கிறார்.  

3 /5

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, தற்போது மகாபலிபுரத்தில் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.  இந்த பகுதியில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.  

4 /5

'வணங்கான்' படத்தை டிசம்பர் மாதம் வெளியிட இயக்குனர் பாலா திட்டமிட்டுள்ளார்.  முன்னர் திட்டமிட்டபடியே படம் எடுக்கப்படுகிறது, காட்சியிலோ அல்லது கதையிலோ எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.  

5 /5

படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, டிஓபியாக பாலசுப்ரமணியம் மற்றும் எடிட்டராக சுரேஷ் அர்ஸ் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.