தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏஆர் முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க உள்ளார்.
ஏஆர் முருகதாஸ் 2001ம் ஆண்டு அஜித்தை வைத்து தீனா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.
அதன் பின்பு விஜயகாந்தை வைத்து ரமணா படத்தின் மூலம் மீண்டும் மிகப்பெரிய வெற்றி இயக்குனராக மாறினார்.
தமிழ் படங்களை தாண்டி பாலிவுட்டிலும் முக்கிய இயக்குனராக இருந்து வருகிறார் ஏஆர் முருகதாஸ்.
ஏஆர் முருகதாஸின் சொத்து மதிப்பு சுமார் 70 முதல் 80 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து இயக்க உள்ளார்.
இயக்குனர் ஏஆர் முருகதாஸ் சமீபத்தில் தனது 49வது பிறந்தநாளை தனது உதவி இயக்குனர்களுடன் கொண்டாடினார்.
ஏஆர் முருகதாஸ் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.