IND vs AUS: ஷ்ரேயாஸ் ஐயருக்கு விட்டுக்கொடுத்த விராட்... அணியில் ஸ்டார்க், மேக்ஸ்வெல் - மாற்றங்கள் என்ன?

IND vs AUS 3rd ODI: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் போடப்பட்ட நிலையில், இரு அணிகளிலும் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.

  • Sep 27, 2023, 13:58 PM IST

IND vs AUS 3rd ODI, Toss Update: மூன்றாவது ஒருநாள் போட்டியின் டாஸ் அப்டேட், பிளேயிங் லெவன், பேட்டிங் - பவுலிங் காம்பினேஷன் ஆகியவற்றை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.

 

 

 

 

 

 

1 /7

மைதானம்: குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள சௌராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தின் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

2 /7

டாஸ் அப்டேட்: போட்டியின் டாஸை வென்ற கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். மேலும் கடந்த இரு போட்டிகளையும் இந்தியா வென்று, தொடரை கைப்பற்றியது. 

3 /7

இந்தியாவின் மாற்றங்கள்: சுப்மான் கில், இஷான் கிஷன், அஸ்வின், ஷர்துல், ஷமி ஆகியோருக்கு பதில் ரோஹித், விராட் கோலி, குல்தீப், வாஷிங்டன் சுந்தர், பும்ரா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

4 /7

ஆஸ்திரேலியாவின் மாற்றங்கள்: கடந்த போட்டியில் விளையாடிய ஷார்ட், ஜாஷ் இங்கிலிஸ், ஷேன் ஆபார்ட், ஆடம் ஸாம்பா, ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோருக்கு பதில் மிட்செல் மார்ஷ், கிளேன் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், தன்வீர் சங்கா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

5 /7

விட்டுக்கொடுத்த விராட்: இந்திய அணியில் தொடக்க வீரர் சுப்மான் கில் இடம்பெறாத நிலையில், இஷான் கிஷனும் வைரஸ் காய்ச்சலால் அணியில் இடம்பெறவில்லை. எனவே, ரோஹித் உடன் விராட் கோலி ஓப்பனிங்கில் களமிறங்குவார் என தெரிகிறது. இதனால், மூன்றாவது இடத்தில் ஷ்ரேயாஸ் விளையாடுவார். பந்துவீச்சில் அஸ்வினுக்கு பதில் வாஷிங்டன் சுந்தரை இந்தியா இன்று முயற்சித்து பார்க்கிறது.

6 /7

அணிக்கு திரும்பிய அதிரடி வீரர்கள்: இந்த தொடரில் முதல்முறையாக ஸ்டார்க், மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா ஆகியோர் வந்துள்ளனர். இதனால், ஆஸ்திரேலியா கடந்த போட்டிகளை விட சற்று வலிமையானதாக தெரிகிறது. எனவே, இந்தியா இவர்களை வீழ்த்தி தொடரை வைட்வாஷ் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல. 

7 /7

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா. ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், தன்வீர் சங்கா, ஜோஷ் ஹேசில்வுட்.