Health Benefits of Fennel Water: நாம் நமது சமையலில் பயன்படுத்தும் பலவித மசாலாக்கள் உணவின் சுவையை அதிகரிக்க உதவுவதோடு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. அப்படி ஒரு ஒரு சூப்பர் மசாலா தான் சோம்பு.
Health Benefits of Fennel Water: சோம்பில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல வித கூறுகள் உள்ளன. சோம்பு நம் வாய் துர்நாற்றத்தை நீக்க உதவும் மௌத் ஃப்ரெஷ்ணராகவும் பயன்படுத்தப்படுகின்றது. பலவித உணவுகளில் இது உணவின் சுவையைக் கூட்ட சேர்க்கப்படுகின்றது. வயிற்று பிரச்சனைகள் மற்றும் செரிமானத்தை சீர் செய்ய சொம்பு விடுகிறது. சோம்ப நீர் குடிப்பதால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் பலவித நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பலவித ஆரோக்கியம் நன்மைகளைக் கொண்டுள்ள சோம்பு நீர் குடிப்பதால் உடலின் பலவித கோளாறுகளுக்கு தீர்வு கிடைப்பதோடு உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. சோம்பு நீரின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நீர்ச்சத்து: தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் பலவித நோய்கள் நம்மை ஆட்கொண்டு விடுகின்றன. உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். சோம்பு நீர் குடிப்பதால் உடலை நீரேற்றமாக வைத்திருக்க முடியும். சோம்பு நீர் குடிப்பதால் சோர்வு, வாந்தித் தொல்லை, மயக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி: பலவித நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்ள நம் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டியது அவசியமாகும். சோம்பில் வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த மிகவும் தேவையான ஒன்றாகும். சோம்பு உடலின் நோய் எதிர்ப்பு செயல்முறையை வலுவாக்குகிறது.
எடை இழப்பு: தினமும் சோம்ப நீர் குடித்து வந்தால் எடை இழப்பில் அதிக உதவி கிடைக்கும். சோம்பு நீர் குடிப்பதால் அவ்வப்போது பசி எடுப்பது குறைகிறது. இதனால் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது தவிர்க்கப்படுகின்றது. வளர்சிதை மாற்றத்தையும் இது மேன்மைப்படுத்துகிறது. சோம்பு நீர் உடல் எடையை குறைக்க பயனுள்ள ஒரு பானமாக இருக்கின்றது
கண்கள் பாதுகாப்பு: சோம்பு நீர் கண் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஏ பார்வை திறனை அதிகரிக்கவும் தெளிவான பார்வையை பெறவும் உதவியாக இருக்கும். தினமும் சோம்பு நீர் குடிப்பதால் கண் பார்வை மங்கலாகாமல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.
செரிமானம்: சோம்பு நீர் இயற்கையான வழியில் செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது. வயிற்றில் உள்ள பிரச்சனைகளை சரியாக்கி, இயல்பான குடல் இயக்கத்திற்கு இது உதவுகிறது.
சோம்பு நீர் செய்வது எப்படி? இரவில் ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சோம்பு சேர்த்து மூடி வைக்கவும். காலையில் இந்த நீரை கொதிக்க வைத்து வடிகட்டி, வெதுவெதுப்பான பதத்தில் குடிக்கவும்.
(பொறுப்புத் துறப்பு: பெருஞ்சீரகம் உடல் ஆரோக்கியத்துக்கு பல வழிகளில் உதவும். ஆனால் எதையும் அதிகப்படியாக எடுத்துக்கொள்வது தீங்கை விளைவிக்கலாம். இந்த பரிந்துரைகளை ஏற்பதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)