பேரீச்சம்பழ டீ: சுவையுடன் ஆரோக்கியம்... கிடைக்கும் சூப்பர் நன்மைகள்

Benefits of Dates Tea: இந்தியர்களாகிய நம் வாழ்வில் தேநீர் மிக முக்கியமான ஒரு அம்சமாக இருந்து வருகிறது. நம் நாட்டில் தேநீர் வகைகளுக்கும் பஞ்சமில்லை.

நாம் தினமும் பல வகையான தேநீர் குடிக்கிறோம். க்ரீன் டீ, ப்ளாக் டீ, செம்பருத்தி டீ, மில்க் டீ என, இப்படி  டீ-களின் பட்டியல் நீண்டது. ஆனால் நீங்கள் டேட்ஸ் தேநீர் குடித்ததுண்டா? டேட்ஸ் அதாவது பேரிச்சம்பழ டீ குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். இதன் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

 

1 /7

பேரீச்சம்பழம் தேநீர் குடிப்பதற்கு சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்கான ஒரு முக்கிய நோக்கம் உள்ளது. பேரீச்சம்பழ டீ குடிக்கும் போது சர்க்கரை தேவைப்படாது. ஆகையால் சர்க்கரையை தவிர்க்க எண்ணம் கொண்டவர்கள் இந்த டீயை குடிக்கலாம். 

2 /7

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது: பேரீச்சம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது, ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் நன்மை பயக்கும்.

3 /7

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: பேரீச்சம்பழத்தில் மக்னீசியம் உள்ளது. இதன் காரணமாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தலாம். இதன் காரணமாக, பருவகால நோய்களின் பிடியில் சிக்கும் அபாயத்தை பெருமளவு குறைக்கலாம்.

4 /7

புற்றுநோய் எதிர்ப்பு: பேரீச்சம்பழத்தில் பீட்டா டி-குளுக்கன் எனப்படும் ஒரு சேர்மன் உள்ளதாக கூறுகின்றன. இது உடலுக்குள் ட்யூமர் எதிர்ப்பு செயல்பாட்டை ஊக்குவிப்பதில் மிகவும் நன்மை பயக்கும். இதை உட்கொள்வதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன.   

5 /7

எலும்பு ஆரோக்கியம்: பேரிச்சம்பழத்தில் செலினியம், மாங்கனீஸ், மெக்னீசியம் மற்றும் தாமிரம் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

6 /7

செரிமானம்: டேட்ஸ் டீ குடிப்பதால் செரிமான பிரச்சனைகள் குணமாகும். ஏனெனில் பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து இருப்பதால் வயிறு தொடர்பான நோய்களை குணப்படுத்த இது உதவுகிறது.

7 /7

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.