அமலா பாலின் 2வது கணவர் ஜகத் தேசாய் யார் தெரியுமா?

Amala Paul Wedding: பிரபல தென்னிந்திய நடிகையான அமலா பால், ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

1 /8

அமலா பால் ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் யார் தெரியுமா?

2 /8

2010ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘மைனா’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர், அமலா பால். 

3 /8

தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களில் இவர் இயக்குநர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றினார். 

4 /8

சில ஆண்டுகள் ஏ.எல் விஜய் மற்றும் அமலா பால் ஆகியோர் காதலித்து வந்தனர், பின்னர் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 

5 /8

இரண்டு ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு, இருவரும் 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். விஜய், 2019ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

6 /8

சிங்கிளாக இருந்த அமலா பால், சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜகத் தேசாய் என்பவரை சந்தித்தார். ஜகத் தேசாய் கோவாவைச் சேர்ந்தவர் என்றும் அந்த மாநிலத்தில் உள்ள பிரபலமான சொகுசு வில்லாவில் மேலாளராகப் பணிபுரிகிறார் என்றும் கூறப்படுகிறது.

7 /8

அது மட்டுமன்றி இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

8 /8

ஜகத் தேசாய்-அமலா பாலின் திருமணம் கேரளாவில் உள்ள கொச்சியில் நடைப்பெற்றது. இந்த திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.