Suriya Kiraganam | எச்சரிக்கை! இந்த ஐந்து ராசிக்கு சூரிய கிரகணம் ஆபத்தானது.. கவனம் தேவை!

Solar Eclipse of October 2, 2024:  இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் நாளை (அக்டோபர் 2) நிகழ இருக்கிறது. இந்த சூரிய கிரகணம் காரணமாக சில இடங்களில் நேரம் நெருப்பு வளையம் தென்படலாம்.

Suriya Kiraganam Date, Time: இந்த சூரிய கிரகணத்தால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய மாற்றம் என்ன? இந்த கிரகணம் எத்தனை மணிக்கு ஏற்படும்? எந்தெந்த பகுதிகளில் காணலாம்? எப்படிப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? போன்ற விவரங்களை பற்றி பார்ப்போம்.

1 /11

சூரிய கிரகணமானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும்போது, சூரியனை சந்திரன் மறைக்கப்படுவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

2 /11

சூரிய கிரகணத்தின் போது குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு அடுத்து 15 நாட்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படலாம். பண பரிவர்த்தனைகளை கவனமாக வைத்திருப்பதும், உடல்நலத்தில் அக்கறை செலுத்துவதும் ரொம்பவே நல்லது.

3 /11

மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை சூரியன் இணைவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் ஏற்படும். பணியிடத்தில் மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே கவனமாக இருப்பது நல்லது.

4 /11

சூரிய கிரகணத்தால் கடக ராசிக்காரர்கள் அடுத்த 15 நாட்களும் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் கடன் கொடுக்கவோ, கடன் வாங்கவோ வேண்டாம். இல்லையெனில் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கு. 

5 /11

கன்னி ராசியில பிறந்தவர்களுக்கு நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். வியாபாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சற்று நிதானமாக செயல்பட வேண்டியது நல்லது. சூரிய கிரகணத்தின் போது நீங்கள் எச்சரிக்கையாக இருப்பதும் உங்களுக்கு நல்லது

6 /11

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு தனஸ்தானத்தில் இந்த கிரகணம் நிகழ இருப்பதால், பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் முன்னெடுக்கும் வேலைகளில் திடீர் தடைகள் ஏற்படலாம். வாக்குவாதங்களையும், வழக்குகளையும் தவிர்க்க வேண்டும். எதிரிகளால் அவமானம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது நல்லது. பண விஷயத்தில் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. 

7 /11

துலாம் ராசியில பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணத்தால் உங்களுடைய வாழ்க்கையில தேவையற்ற பிரச்சனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் வேலையை முடிப்பத்தில் பிறரின் தொந்தரவு ஏற்படலாம். உங்களின் வேலை திட்டங்களை முடிக்க கடின உழைப்பு பனாம் மற்றும் முதலீடு விஷயங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.

8 /11

இந்திய நேரப்படி, சூரிய கிரகணம் அக்டோபர் இரண்டாம் தேதி இரவு 9:12 மணிக்கு தொடங்கி அக்டோபர் மூன்று நள்ளிரவு 3:17 மணிக்கு நிறைவடைகிறது. நெருப்பு வளையம் போன்று தோன்றக்கூடிய கிரகணத்தின் உச்சநிலையானது நள்ளிரவு 12:15 மணிக்கு ஏற்படும்.

9 /11

இந்த சூரிய கிரகணம் தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள சில நாடுகளில் தெரியும். பசிபிக் பெருகடல், அட்லாண்டிக், அண்டார்டிகா பகுதிகளில் சூரிய கிரகணத்தின் ஒரு பகுதியை பார்க்கலாம். இந்தியாவில் இந்த கிரகணத்தை பார்க்க இயலாது.

10 /11

பொதுவாக சூரியனை வெறும் கண்ணால் பார்ப்பது கூடாது. அதிலும் குறிப்பாக சூரிய கிரகண நேரத்தில் சூரியனை உற்றுநோக்கி பார்க்கும் பொழுது நம் கண்களை பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் பார்வை கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு.

11 /11

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.