மொபைல் பயனர்கள் கவனத்திற்கு: Sep 1 முதல் தாக்கத்தை ஏற்படுத்தும் பல மாற்றங்கள்

Changes from September 1: நீங்கள் ஸ்மார்ட்போனை உபயோகித்து டிஸ்னி + ஹாட்ஸ்டார் போன்ற OTT தளங்களைப் பயன்படுத்தினால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் தேவையான செய்தியாக இருக்கும். டிஸ்னி + ஹாட்ஸ்டார் அதன் பிளான்களின் கட்டணத்தை உயர்த்தப் போகிறது.  இதனுடன், அமேசான், கூகுள், கூகுள் டிரைவ் போன்ற சேவைகளின் விதிகளும் மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் செப்டம்பர் 1 மற்றும் செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும். இந்த 5 மாற்றங்களையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். இந்த மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த 5 விதிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

1 /5

செப்டம்பர் 1 முதல், OTT தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா இந்தியாவில் அதிகரிக்கும். பயனர்கள் அடிப்படை திட்டத்திற்கு ரூ .399 க்கு பதிலாக ரூ .499 செலுத்த வேண்டும். அதாவது, 100 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். அதே நேரத்தில், ரூ .899 க்கு, வாடிக்கையாளர்கள் இரண்டு போன்களில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலியை இயக்க முடியும். மேலும், இந்த சந்தா திட்டத்தில் HD தரமும் கிடைக்கிறது. இந்த செயலியை 4 திரைகளில் 1,499 ரூபாய்க்கு இயக்கலாம்.

2 /5

செப்டம்பர் 1 முதல், அமேசானிலிருந்து பொருட்களை ஆர்டர் செய்தால் அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும். டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வால், நிறுவனம் லாஜிஸ்டிக்ஸ் செலவை அதிகரிக்ககூடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் 500 கிராம் தொகுப்புக்கு ரூ. 58 செலுத்த வேண்டி இருக்கலாம். பிராந்திய கட்டண செலவு ரூ. 36.50 ஆக இருக்க்கூடும்.  

3 /5

கூகிள் பிளே ஸ்டோருக்கு புதிய விதிமுறைகள் 15 செப்டம்பர் 2021 முதல் அமலுக்கு வருகின்றன. செப்டம்பர் 15 முதல் இந்தியாவில் குறுகிய தனிநபர் கடன் செயலிகள் தடை செய்யப்படும். இவை கடன் வழங்கும் சாக்கில் பயனர்களை ஏமாற்றி கடன் வாங்குபவர்களை துன்புறுத்துகின்றன. இது போன்ற சுமார் 100 குறுகிய கடன் செயலிகள் குறித்து புகார் அளிக்கப்பட்டது. அதன் பிறகு கூகுள் மூலம் இதுபோன்ற செயலிகளுக்கு புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. புதிய விதிகளைப் பின்பற்றி, செயலி உருவாக்குநர்கள் குறுகிய கடன் செயலிகள் தொடர்பான கூடுதல் ஆவணங்களை வழங்க வேண்டும்.  

4 /5

கூகிளின் இந்த புதிய கொள்கை செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது, இதன் கீழ் தவறான மற்றும் போலி உள்ளடக்கங்கள் மற்றும் கருத்துகளை ஊக்குவிக்கும் செயலிகள் செப்டம்பர் 1 முதல் தடை செய்யப்படுகின்றன. நீண்டகாலமாக பயன்பாட்டில் இல்லாத செயலிகள் டெவலப்பர்கள் மூலம் பிளாக் செய்யப்படும் என கூகிள் தனது வலைப்பதிவு இடுகையில் கூறியுள்ளது. கூகிள் பிளே ஸ்டோரின் விதிகளை, முன்பு இருந்ததை விடக் கடுமையாக்க கூகிள் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

5 /5

கூகுள் டிரைவ் பயனர்கள் செப்டம்பர் 13 அன்று புதிய பாதுகாப்பு அப்டேட்டைப் பெறுவார்கள். இதன் காரணமாக கூகுள் டிரைவின் பயன்பாடு முன்பை விட அதிக பாதுகாப்பாக இருக்கும்.