ருவாண்டா பெண்ணின் பரிதாப நிலை; ‘வேற்றுகிரக’ குழந்தையை பெற்றெடுத்த சோகம்..!!!

நீங்கள் பல திரைப்படங்களில் வேற்றுகிரகவாசிகளைப் பார்த்திருக்கலாம், ஆனால் நிஜ வாழ்க்கையில் இதுவரை வேற்றுகிரகவாசிகளுக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டாவில் ஒரு பெண் விசித்திரமான குழந்தையைப் பெற்றெடுத்தார். சிலர் அந்த குழந்தையை வேற்றுகிரகவாசி என்றும், பலர் அவரை பிசாசு என்றும் அழைக்கின்றனர். தந்தை கூட குழந்தையை ஏற்கவில்லை.

1 /4

டெய்லி ஸ்டாரில் வெளியிடப்பட்ட செய்தியின் படி, குழந்தையின் தந்தை அவர் பிறந்தவுடன் அவரை ஏற்க மறுத்து, குழந்தையைக் கொல்ல வேண்டும் என மனைவிக்கு கட்டளையிட்டார். ஆனால் ருவாண்டாவைச் சேர்ந்த பஜெனெசா லிபர்ட்டா இதற்கு உடன்படவில்லை, அதன் பிறகு அந்தப் பெண் கணவர் மற்றும் குடும்பத்தினரால் தனியாக விடப்பட்டார். குடும்பத்துடன் வாழ விரும்பினால், குழந்தையை கொன்று விட வேண்டும் என்று பெண்ணின் கணவர் கூறியுள்ளார். (புகைப்படம்: நியூஸ் ஃப்ளாஷ்)

2 /4

குழந்தையின் தாய் பஜெனேஜா தனது சோகக் கதையை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். தான் வருத்தமாக இருப்பதாக கூறினார். இதன் காரணமாக குழந்தையை தனியாக பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார். (புகைப்படம்: நியூஸ் ஃப்ளாஷ்)

3 /4

பஜினேஜாவை அவரது மாமனார் மற்றும் கணவர் தனியாக விட்டுவிட்டனர். இதன் காரணமாக, அந்தப் பெண் தனது குழந்தையை வளர்ப்பதில் மிகவும் சிரமப்படுகிறார். எல்லோரும் குழந்தையை வேற்றுகிரகவாசி என்று அழைக்கிறார்கள்.  (புகைப்படம்: நியூஸ் ஃப்ளாஷ்)

4 /4

குழந்தையைப் பார்த்து, எல்லோரும் அவரை கேலி செய்கிறார்கள். அவரது கிராம மக்கள் குழந்தையையும் அவரது தாயையும் புறக்கணித்தனர். குழந்தைக்கு ஏன் இப்படி ஒரு நிலை இருக்கிறது என்று டாக்டர்களால் கூட விவரிக்க முடியவில்லை. பஜெனேஜா தனது மகனுக்கு மிகவும் வலி இருப்பதாக கூறினார். இப்போது அவள் தன் மகனின் சிகிச்சைக்காக ஆன்லைனில் மக்களிடம் உதவி கேட்கிறார். இதற்காக, அவர் ஒரு ஆன்லைன் கணக்கையும் தொடங்கியுள்ளார். (புகைப்படம்: நியூஸ் ஃப்ளாஷ்)