Photo: "அத்ரங்கி ரே" படத்தில் ஒன்றாக இணையும் அக்‌ஷய், சாரா, தனுஷ்

அக்‌ஷய் குமார் தனுஷ் மற்றும் சாரா அலி கான் ஆகியோர் விரைவில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் "அத்ரங்கி ரே" படத்தில் இணைய உள்ளனர். இந்த படம் தொடர்பான டங்கள் வைரலாகி வருகின்றன.

புதுடெல்லி: அக்‌ஷய் குமார் (Akshay kumar), தனுஷ் (Dhanush), சாரா அலிகான் (Sara Ali Khan) ஆகியோர் விரைவில் ஒரு படத்தில் ஒன்றாக நடிக்க உள்ளனர். இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். திரைப்பட தயாரிப்பாளர் தரன் ஆதர்ஷ் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படத்தின் பெயர் "அத்ரங்கி ரே'" (Atrangi Re). இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கி 2021 ஆம் ஆண்டில் படம் வெளியிடப்படும். தற்போது வெளியாகி உள்ள படத்தில் அக்‌ஷய் குமார் மற்றும் தனுஷ் ஆகியோர் சாராவை முத்தமிடுவதைக் காணலாம். இந்த படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. (புகைப்பட உபயம்: தரன் ஆதர்ஷின் ட்விட்டர் கணக்கு)

1 /5

2 /5

3 /5

4 /5

5 /5